பக்கம்:பாரதித் தமிழ்.pdf/369

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விநோதக் கொத்து

சக்திதாஸன்

30 நவம்பர் 1920 ரெளத்திரி கார்த்திகை 16 * மார்னிங் போஸ்ட் ‘’ பத்திாாதிபரின் கற்பணுசக்தி “மார்னிங் போஸ்ட்’ பத்திராதியர் மன

ஸாகரிப்படி எழுதும் விஷயத்தில் அத்தனை கீர்த்தி யடைந்தவரல்லர். எனினும் அவருடைய ஸ்மீபக் கற்பனையொன்றைப் படித்துப் பார்க்கையிலே, அவர் அபாண்டக் கதைகளெழுதும் வித்தையை நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக அபிவிருத்தி செய்து வருகிருரென்று புலப்படுகிறது. மந்திரி மாண்டேகு இந்தியாவில் ஒத்துழையாமைக் கிளர்ச் சியை அழித்துவிடும் பொருட்டு அடக்கு முறைகளை யதேஷ்டமாக அனுஷ்டித்து, அக்நி மழை பெய்யும் படி இந்தியாவிலுள்ள அதிகாரிகளுக்குக் கட்டளை பிறப்பிக்க வேண்டுமென்பது அப்பத்திராதிபருடைய கருத்து. அங்ஙனம் மாண்டேகு கட்டளை செய்யாம லிருப்பதன் காரணம் யாதென்று அப்பத்திராதிபர் ஆராய்ச்சி செய்து பார்க்கிரு.ர். அந்த ஆராய்ச்சியில் அவர் கண்ட முடிவு மிக விநோதமானது. உலக முழுமையிலுமே ராஜாங்கப் புரட்சி யேற்படுத்த வேண்டுமென்ற கருத்துடைய ருஷிய ஜநாதிபதி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/369&oldid=605762" இலிருந்து மீள்விக்கப்பட்டது