பக்கம்:பாரதித் தமிழ்.pdf/373

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


374 பாரதி தமிழ்

துக்கும் நட்புறுதி யுண்டாகுமாறு பாடுபட்டு வந்த வருமாகிய ஸர் ஜான் ஸ்டவ்ரிட் என்பவர் வெனிஜி லாஸுக்கு ஒரு அனுதாபத் தந்தி யனுப்பியது காரணமாக அந்த ஸ்தானதிபதியை இப்போதுள்ள கிரேக்க கவர்ன்மெண்டார் உத்யோகத்தைவிட்டு நீக்கியதாயுந் தெரிவிக்கப்படுகிறது. இந்த வெனிஜி லாஸ் மந்திரியைப் போலவே ருஷியாவை நேசக் ககரிக்கு வாலாக்கிவிட முயற்சி செய்த கெரன்ஸ்கி என்ற ருஷிய மந்திரியை மித்திரன் நேயர்கள் மறந் திருக்க_மாட்டார்ளென்று நம்புகிறேன். ஒரு காலத்தில், கெரன்ஸ்கியை ருஷியா தேசத்து நெப் போலியன் என்று சில ஆங்கிலேயப் பத்திராபதிபர் முதலியோர் சொல்லி வந்தனர். இன்று அந்தக் கெரன்ஸ்கியின் பெயரையே உலகத்தார்மறந்துவிடக் கூடிய நிலைமை வந்துவிட்டது. மிஸ்டர் வெனிஜி லாஸ், மிஸ்டர் கெரன்ஸ்கி இவ்விருவரில் ஸ்வ்தேசா பிமானப் பரிசு யாருக்குக் கொடுக்கலாமென்று யோசித்தால் அந்த யேர்சனையில் ஒரு முடிவுக்கு வருதல் ஸாத்தியமில்லை யென்றே தோன்றுகிறது.

ஜெர்மனியை ஸர்வதேச ஸங்கத்தில் சேர்த்துக் கொள்ளலாமா?

ஸ்ர்வ தேச ஸங்கத்தில் ஜெர்மனியைச் சேர்த் துக்கொள்ள வேண்டுமென்று, நார்வே, ஸ்வீடன், தென் ஆபிரிகா, ஸ்விட்ஜர்லாந்து, இத்தாலி, ஸ்பெயின், தென் அமெரிக ராஜ்யங்களிற் பல, இங்கிலாந்து என்ற தேசங்கள் சொல்லுவதாகவும், ஜப்பான், சீன தேசங்கள் இங்கிலாந்தின் கருத் தையே தழுவி நிற்குமென்று நம்பப்படுவதாகவும், ப்ரான்ஸ், பெல்ஜியம், போர்த்துகல், போலந்து, ஆஸ்த்ரேலியா, ந்யூஜிலாந்து, கானடா, ஜெக்கோஸ் லாவியா என்னும் அரசுகள் ஜெர்மனியைச் சேர்க்க