பக்கம்:பாரதித் தமிழ்.pdf/374

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விநோதக் கொத்து 375

-”

லாகாதென்று தடுப்பதாகவும், ஸமீபத்தில் கிடைத்த ராய்ட்டர் தந்தியொன்று சொல்லுகிறது. இதனி டையே, தமக்குள் பரஸ்பரம். அதிகாரப் பத்திரம்” கொடுத்துக் கொண்டு நேசக் கrதியார் தம் இஷ்டப் படி வெளிநாடுகளை ஆண்டுவர முயல்வதில் அனுஷ்டி கப்படும் தற்கால முறைமையை ஜெர்மனி எதிர்ப் பதாகவும், தானிழந்த குடியேற்ற நாடுகளின் எதிர் கால நிலை தற்காலத்தில் அவற்றைக் கைப்பற்றி யாள்வோரால் நிர்ணயிக்கப்படத் தக்கதன்றென வும், ஸர்வதேச ஸங்கத்தாராலேயே முடிவு செய்யப் பட வேண்டுமெனவும் ஜெர்மனி சொல்வதாகவும், வேறொரு தந்தியிலே கூறப்படுகிறது. ஜெர்மனி ஸ்ர்வதேச ஸங்கத்தில் சேரும்படி ஏற்பாடு செய்வார் களோ மாட்டார்களோ அதைக் குறித்து எனக் கதிகக் கவலையில்லை. எப்படியாவது ஆசியா முதலிய வெளிக் கண்டங்களின் நாடுகளை ஐரோப்பியர் தமதிஷ்டப்படி பரஸ்பரம் அதிகாரப் பத்திரம்’ எழுதிக் கொடுத்து அநீதியாக ஆள்வதென்ற ஏற் பாடு சிதறிப் போகவேண்டு மென்பதே என் பிரார்த் தன. அந்தப் பிரார்த்தனை நிச்சயமாக விரைவில் நிறைவேறு மென்பதற்குப் போதிய அடையாளங்கள் தற்கால ஐரேப்பாவின் நிலைமையிலே காணப்படு கின்றன.

இதில் மிகவும் ஆறுதலுக்குரிய அம்சம் எது வெனில் பங்கிடற்குரிய ராஜ்யங்களின் தொகைமிகக் குறைவாகவும், அவற்றைப் பங்கிட்டாள விரும்பும் ராஜ்யங்களின் தொகை மிக அதிகமாகவும் ஏற் பட்டிருத்தலேயாம். ஊரிரண்டுபட்டால் கூத்தாடிக் குக் கொண்டாட்டம். கூத்தாடிகளுக்குள்ளே ககதி பேதங்கள் மிகுதிப்பட்டால் ஊராருக்கு நல்லது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/374&oldid=605771" இலிருந்து மீள்விக்கப்பட்டது