பக்கம்:பாரதித் தமிழ்.pdf/377

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

378 பாரதி தமிழ்

ரென்றும் ஆதலால் இக்காலத்தில் அந்தப் பிள்ளைகள் அஸ்-ரக் கொடியை மீளவும் தூக்கிப் பிராமணரைப் பகைக்கவேண்டுமென்றும் போதிக்கத் தொடங்கி ஞர்கள். இந்தியாவிலுள்ள ஜாதி பேதங்களைத் தீர்த்துவிட்டு இங்கு ஸ்மத்வ தர்மத்தை ஸ்தாபிக்க வேண்டுமென்ற நோக்கத்துடன் அந்தப் பாதிரிகள் இந்த வேலை செய்யவில்லை. ஹிந்து மதத்துக்குக் கேடு சூழவேண்டுமென்ற நோக்கத்துடன் செய் தார்கள். ஆனல், இதில் மற்றாெரு விநோதமுண்டு. அஃதியா தென்றால் இந்தியாவில் பிராமணர்களி லேயே முக்காற் பங்குக்குமேல் பழைய சுத்தமான ஆர்யர்களல்லரென்றும் விசேஷமாகத் தென் இந்தி யாவில் இவர்கள் பெரும்பகுதி அஸ் ர வம்சத்தா குடன் கலந்துபோனவர்களின் சந்ததியாரென்றும், அப்பாதிரிகளும் அவர்களுக்கு இந்த அம்சத்தில் குருக்களான ஐரோப்பிய பண்டிதரும் தெரிவிக் கிறார்கள். எனவே பிராமணராகிய நாங்கள் இப் போது உங்களைப்போலே அஸ்-ர ராrஸ்ராய் விட்ட பிறகும் நீங்கள் எங்களைப் பகைக்கவேண்டு மென்று அந்தப் பாதிரிகள் போதிப்பது முன்னுக்குப் பின் முரண்படுகிறதன்றாே? மேலும் இந்த ‘திராவிடர்’ என்போர் அஸ்-ர, ராக்ஷஸர்களின் ஸ்ந்ததியாரென்பதும் அவர்களிடமிருந்து பிராமணர் ராஜ்யம் பிடித்த கதையும் யதார்த்தமென்று வேடிக் கைக்காக ஒரு கடினம் பாவனை செய்து கொள்வோம்: அப்படிக்கிருந்தாலும் அந்த ஸம்பவத்தில் பிராம ணரின் மந்திரத்தால் அஸ்ாரர்களை ஜயித்ததாகத் தெரிகிறதேயன்றி மாக்ஸ் முல்லரின் கருத்துப் படிக்கும் பிராமணர் அரசாண்டதாகத் தெரிய வில்லை. பிராமணர்களையடுத்து, கூடித்திரியர்களே ராஜ்யமாண்டனரென்று தெரிவிக்கப்படுகிறது. தவி ரவும் அந்த ஸம்பவம் நடந்து இப்போது புராணங் களின் கணக்குப்படி பார்த்தால் பல லக்ஷங்களோ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/377&oldid=605775" இலிருந்து மீள்விக்கப்பட்டது