பக்கம்:பாரதித் தமிழ்.pdf/386

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


உலக விநோதங்கள் 387

லாந்துடன் யுத்தம் நடத்தி வருகிறபடியால் தாங்கள் பிடிபட்ட இடத்தே தங்களை யுத்தக் கைதிகளாக நடத்த வேண்டுமென்று ஐரிஷ் தலைவர் சொல்வதை ஒருவாறு கவர்ன்மெண்டார் அங்கீகாரம் செய்து கொண்டே இவ்வித வேலை செய்து வருவதாகவும், அக்கொள்கைக் கிணங்கவே, இப்போது பிடிபட் டிருக்கும் ஐரிஷ் தலைவர்களை பந்தோபஸ்தில் வைத்து யுத்தக் கைதிகளொப்ப நடத்த உத்தேசங் கொண் டிருப்பதாகவும், ஒரு தந்தி மூலமாக அறிக்கையிடப் படுகிறது. இங்ஙனம், ஐர்லாந்தில் ந ட க் கு ம் போராட்டத்தை ஆங்கிலோ-ஜெர்மனிய யுத்தம் போல் ஒர் ஆங்கிலோ-ஐரிஷ் யுத்தமாக பாவித்து நடத்த வேண்டுமென்பது ப்ரிட்டிஷ் மந்திரிகளின் உண்மையான நோக்கமாயின், அந்த நோக்கத்தை வெளி யுலகத்தார் அதிகமாகக் கொண்டாட மாட்டார்களென்று தோன்றுகிறது.

ஸ்ம பலமுடைய தேசங்களுக்குள்ளே யுத்தம் ஸ்ாத்யப்படும். ஏற்கெனவே பல நூற்றாண்டுகளாக இங்கிலாந்தின் கீழேயிருப்பதும், பல நூற்றாண்டு களாக விடுதலைக்குக் கிளர்ச்சி நடத்தி வருவதும், இப்போது குடியரசு வேண்டுவதுமாகிய சார்பு நாடொன்றை அடக்கும் தொழிலுக்கு “யுத்தம்” என்ற பட்டம், ஸின்பீனர்களாலே சூட்டப் பட்டாலும், பொறுப்புள்ள மந்திரிகள் அப்பட் டத்தை அங்கீகரித்தல் பெருந் தவறென்று நினைக் கிறேன். ஆனால் இங்கிலாந்தில் எக்காலமுமில்லாத படி ஸ்கல-கr-மந்திரி சபை சேர்த்து மிஸ்டர் லாய்ட் ஜ்யார்ஜ் நடத்தி வரும் வேடிக்கையான ஆட்சி முறையில் இப்படி விநோதங்கள் ஏற்படுவது எனக்கு ஆச்சர்யமாகத் தோன்றவில்லை. கண்ணுக் குத் தெரியாமல் மறைந்திருந்து போலீஸாரைச் சுட்டு விட்டோடும் நூறே சில்லரை ஐரிஷ் ஸின் பீன