பக்கம்:பாரதித் தமிழ்.pdf/406

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விசேஷக் குறிப்புகள் 407

வரவில்லை. பிறகு அவர் நார்வேயிலிருந்து அமெரிக் காவுக்குப் புறப்பட்டுப் போனர். அங்கே, ஒரு வயலில் உழவு வேலை செய்து வந்தார். “ட்ராம்’ வண்டி ஒட்டினர். 1885ஆம் வருஷத்தில் மறுபடி நார்வேக்கு மீண்டு இலக்கியத் தொழில் தொடங் கினர். மறுபடி தோல்வி ஏற்பட்டது.

பிறகு ந்யூபவுண்ட்லாந்து தீவில் மூன்று வருஷம் மீன் பிடிக்கிற படகில் வேலை செய்து வந்தார். அப்பால் பட்டினி’ என்றாெரு கதை யெழுதி வெளி யிட்டார். அதில் பெரும் பகுதி அவருடைய சொந் தக் கதை. அந்தப் புஸ்தகம் வெற்றியடைந்தது. அது முதல் அவர் வெளியிட்டு வரும் பல நூல்களால் அவருடைய கீர்த்தி உறுதி பெற்று விளங்குகிறது. குறிப்பு :-நோபல் பவுதிக சாஸ்ரத்ர'ப் பரிசுகளில் 1919-ஆம் வருஷத்துப் பரிசு யாருக்கும் கொடுக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது: டிெ 1920-ஆம் வருஷத்துப் பரிசு ப்ரான்ஸ் தேசத்தில் ப்ரதெய் (Bretehil) நகரத்தில் ஸ்ர்வ தேசீய நிறையளவுக் கார்யஸ்தலத்தில் தலைமையதி காரியாகிய மிஸ்டர் ஸி. இ, (g) கிய்யோம் என்பவருக்குக் கொடுக்கப் பட்டிருக்கிறது. இங்கிலிஷ் பாஷையிலுள்ள வில்லியம் என்னும் நாமமே ப்ரெஞ்சு பாஷையில் (g) கிய் யோம் என்று வழங்குதலறிக.)

5. கலகக்காரர்

மெஸ்படேமியா எவ்வகையிலும் ப்ரிடிஷ் ராஜாங்கத்தின் ஒரு பகுதியாகக் கணிக்கப்படத் தகர்ததாகையால், அங்கு போர் செய்யும் அராபி யரைக் கலகக்காரர்’ என்று சொல்லுதல் பொருந் தாதென்று சிறிது காலத்திற்கு முன்பு லண்டன் “டைம்ஸ்’ பத்திரிகை எழுதிற்று. ஸாதாரண யுத் தத்தில் கைதிகளாக எதிரிகள் அகப்பட்டால், அவர் களை எப்படி நடத்த வேண்டுமோ, அப்படியே அந் நாட்டரபியர் கைதிகளாகும் போது செய்ய வேண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/406&oldid=605821" இலிருந்து மீள்விக்கப்பட்டது