பக்கம்:பாரதித் தமிழ்.pdf/456

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


மணித் திரள் 45?

மிஸ்டர் லாய்ட் ஜ்யார்ஜ் பேசிய விஷயம் பின்னிட்டு இங்கிலாந்தில் ப்ரசுரமாய், ராய்ட்டர் தந்தி மூல மாக நமக்கெட்டி யிருக்கிறது. அதிலேகூட மிஸ்டர் லாய்ட் ஜ்யார்ஜ் ஜெர்மனி கொடுக்க வேண்டிய நஷ்டஈட்டுத் தொகையை விட்டுக் கொடுப்பதும் கிறிஸ்தவ ஜனங்களை மீட்டும் துருக்கியின் ராஜாங்க நுகத்தடியின் கீழே கொணர்வதும் “லிபரல் ககதி யின் நோக்கத்துக்கு விரோதமென்று வற்புறுத்திக் காட்டியிருக்கிரு.ர். இதுபோலவே, துருக்கியிட மிருந்து பறிக்கப்பட்ட பூமிகளை அதன்பால் மீட்டும் விடுவதினின்றும் கிறிஸ்தவ நாகரிகத்துக்கு ஹானி வருமென்ற தமது கொள்கையை ஆங்கிலத் தலைமை மந்திரி இதுவரை எத்தனையோ முறை சொல்லி யிருக்கிரு.ர். எனவே, லண்டனில் இப்படிப்பட்ட மந்திரிகளின் ஆதிக்கத்தின் கீழே நடத்தப் போகிற கூட்டத்தில் துருக்கிக்கு எள்ளளவேனும் நியாயம் கிடைக்காது. கிரேக்க தேசத்துக்குப் பிடுங்கிக் கொடுத்த பிரதேசங்களில் கிறிஸ்தவர்கள் வாஸம் புரிவதால் அவற்றைத் துருக்கிக்கு மீட்டும் ஒப்பு விப்பது சரியில்லையென்று சொல்லும் ஆங்கிலேய முதல் மந்திரி மெஸ்பொடோமியாவில் கிறிஸ்தவ ஜனத் தொகையில்லை யென்றுணர்ந்தும் அதை யேன் துருக்கியிடம் கொடுத்துவிடக்கூடாது? அந்த மெஸ்பொடோமியாவை இங்கிலாந்து கிறிஸ்தவ நாகரிகத்தால் மஹிமைப்படுத்த எண்ணங்கொண்டு விட்டது. ஆதலால் அதையும் விடக்கூடவில்லை; என்ன செய்யலாம்?

மயிலே, மயிலே

“மயிலே, மயிலே, இறகு போடு’ என்றால் போடாது. வற்புறுத்தி இறகைப் பிடுங்கவேண்டும். வெறும் வாய்ப் பேச்சால் இங்கிலாந்தினிடமிருந்து நீதி பெறுதல் ஸாத்யமில்லை. இந்தியாவிலும், மற்ற