பக்கம்:பாரதித் தமிழ்.pdf/457

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

458 பாரதி தமிழ்

முஸ்லிம் தேசங்களிலும் பலமான கிளர்ச்சி நடத்தி லைன்றி, ஸேவர்’ உடம்பாடு நியாயப்படி மாற்றப் ப்டுதல் ஸாத்யமில்லை. கிளர்ச்சி செய்யுங்கள்!” “கிளர்ச்சி செய்யுங்கள்!” கிளர்ச்சி செய்யுங்கள்!” என்று முக்காலும் கூறி, ரீமான் தாதாபாய் நவுரோஜி கல்கத்தா காங்கிரஸ் ஸ்பையில் செய்த உப்தேசத்தையே இன்று நான் முஸ்லிம் ஆனது முழுமைக்கும் செய்கிறேன். ஆசியா வாளிகள் அனைவருக்கும் செய்கிறேன்.

அடக்கு முறைகள்

1921 பெப்ருவரி 10-ஆந்தேதியன்று ரீ காசியில் தேசீய ஸ்ர்வ கலாசாலையொன்று மஹாத்மா காந்தி யால் திறந்து வைக்கப்பட்டது. அந்த விசேஷம் நடக்கும்பேர்து பிரமாண்டமான ஜனத்திரள் கூடி யிருந்தது. அந்தக் கூட்டத்திற்கு வந்திருந்த ஐக்ய மாகாணத்து விவசாயிகளின் தலைவராகிய பாபா ராம் சந்தர் என்ற ஸந்யாஸியைத் துப்பாக்கியில் மருந்தேற்றிக்கொண்டு போலீஸார் பெருங் கூட்ட மாக வந்து கைதி செய்ததாகத் தெரிகிறது. கூட்டத் தார் மனக் கொதிப்பினல் கல்கம் செய்வார்களென் றும், அதை முகாந்த்ரமாகக் காட்டித் தாங்கள் ஏராளமாக ஜன்ங்கள்ேச் சுட்டுத் தள்ளுவதுமன்றி. மஹாத்மா கிர்ந்திக்கும். ஏதேனும் ஆபத்துண்டாக் கலாமென்றும் போலீஸார் எதிர்பார்த்தனர் போலும். ஆனல் அந்த அவமானத்தை ஜனங்கள் ஸமாதானமாகப் பொறுத்திருக்கும்படி தலைவர்கள் சொல்லியது கேட்டு ஜனங்கள் சும்மா இருந்து விட்டனர். எனவே, போலீஸார் பாபா ஒருவரை மாத்திரங்கொண்டு மீண்டேகினர். தேசீய ஸர்வ கலாசாலையின் ஆரம்ப விசேஷங்கள் நடத்தும் இடத்திலே தான பாபாவைப் பிடிக்கவேண்டும்? தனியாக அவர் வீட்டிலிருக்கும்பேர்து பிடிக்கக்