பக்கம்:பாரதித் தமிழ்.pdf/478

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


புதுமைகள்

காளிதாஸன்

2 uos # # 1 92 1 ரெளத்திரி மாசி 19

ஸோவியட் ருஷ்யாவில் பணம் தொ?லந்தது :

லாரின் என்பவருடைய அறிக்கையின்மீது ஸோவியட் கவர்ன்மெண்டார் (ருவியக் குடியரசு ராஜாங்கத்தார்) ஒர் தீர்மானம் பிறப்பித்திருத் கிறார்கள். அதன்படி அரசிறை யாட்சித் தலைவர் தகுந்த உத்யோகஸ்தர்களுடனே கலந்துகொண்டு இன்னும் ஒரு மாஸ் காலத்திற்குள்ளே ஒரு நகல் சட்டம் தயார் செய்து பிரதிநிதி ஸ்பையாருக்குத் தெரிவிக்க வேண்டும். அந்தச் சட்டத்தின் கருத்து யாதென்றால், தொழிலாளருக்கும், வேலையாட் களுக்கும், அவர்களுடைய குடும்பத்தாருக்கும் உண விலாகாவில் கொடுக்கப்பட்ட, முதல், இரண்டாந் தரத்து ஆஹாரச் சீட்டுகளுக்குத் தரப்படுவன உட்பட்ட எல்லா சாமான்களுக்கும் பணம் கொடுக்கும் முறையை ஒழித்துவிட வேண்டும் என்பது. ராஜாங்கத்துக்குரிய அல்லது நகர ஸ்பை களுக்குரிய வீடுகளில் குடியிருக்கும் தொழிலாளர், வேலையாட்கள், அவர்களுடைய குடும்பத்தார்களிட மிருந்து பண வாடகை வாங்குவதை நிறுத்தி விடுவதும் அந்தச் சட்டத்தின் நோக்கம். இங்ஙனமே,