பக்கம்:பாரதித் தமிழ்.pdf/488

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காலக் கண்ணுடி

சக்திதாஸன்

15 tor; & I 92.1 ரெளத்திரி பங்குனி 2

சமா சாப் பத்திரிகைகள்

இங்கிலாந்தில் சில முக்யமான வாசகசாலைத் தலைவர் இவ்வருஷத் தொடக்கத்தில், மற்றப் பழம் பத்திரிகைகளை விலை க் கு க் கொடுத்ததுபோல், “லண்டன் டைம்ஸ்’ பத்திரிகையை மட்டும் கொடுக் காமல் உலக சரித்திரத்துக்கு ஆதாரமாகச் சேகரித்து வைத்தார்களென்று தெரிவிக்கப்படுகிறது. தமிழ் நாட்டில் அத்தகைய பதவி நம் சுதேசமித்திரனுக்குக் கடவுள் அனுக்ரஹம் செய்யும்படி பிரார்த்திக் கிறேன். வர்த்தமானப் பத்திரிகைகளின் நிலைமை பொதுப்படையாகவே நாள்தோறும் ஏறிக்கொண்டு வருகிறது. உலகத்து ராஜ்ய தந்த்ரங்களுக்குப் பொதுஜன ஆதரவு அவசியமென்ற விதி பலப்பட பலப்படப் பத்திரிகைகளின் சக்தி மிகுதிப் பட்டுக் கொண்டு வருகிறது. வியாபாரிகளுக்கு வர்த்தமானப் பத்திரிகை இன்றியமையாத விளக்காய்விட்டது. கைத்தொழில் வளர்ச்சிக்கும் பத்திரிகைகள் தூண்டு தலாகி வருகின்றன. இலக்கியத் துறையிலும் பத்திரிகைகள் மேன்மேலும் மாண்புயர்ந்து வரு மென்று தோன்றுகிறது.