பக்கம்:பாரதித் தமிழ்.pdf/491

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

492 பாரதி தமிழ்

லாரும் ஒரே ஜாதி யென்ற ஸாதாரண இங்கிலிஷ் படிப்பாளிகளின் கொள்கையை நான் அனுஸ்ரிக்க வில்லை. உலகத்து மனிதர்கள் எல்லாரும் ஒரே ஜாதி ‘வஸ தைவ குடும்பம்” என்ற பர்த்ருஹரி யின் கொள்கையைத் தழுவியுள்ளேன். மனித ஜாதியும் மற்ற ஜந்து ஸ்மூஹங்களும் ஒரே குடும்ப மென்ற (d) டார்வின் என்னும் ஆங்கில சாஸ்த்ரி யின் கருத்தைப் பின் பற்றுகிறேன். எல்லா ஜீவர் களும் கடவுளுடைய அம்சமென்ற பகவத்கீதையின் பரமோபதேசத்தைக் கடைப் பிடித்து நிற்கிறேன். ஒரு பிராமணனை, ஒரு ஆங்கிலேயனே, ஒரு ஆட் டைக் கொல்லுதல் அல்லது அடிப்பதால் எய்தும் பாவம் ஒரே மாதிரி. உபசரிப்பதால் அல்லது வணங் குவதால் எய்தும் புண்யமும் ஒரே தன்மையுடையது. இஃதென் உண்மையான், ய்ான் ஒழுக்கப்படுததி வருகிற கொள்கை. எனிலும் ஜாதி பேதம் தொலை யும் வரை நாம் ஸ்வராஜ்யம் புரியத் தகுதி பெற மாட்டோம் என்று சொல்வோருடைய பேச்சுக் காசு பெருதென்பதை நான் உறுதியாகத் தெரி விக்க விரும்புகிறேன். திருஷ்டாந்தமாக, ஸeப காலத்தில் கிடைத்த டோக்யோத் தந்திகளினின் றும் அங்கு பரம நீதி ஸ்பை (ப்ரவி கெளன்ஸில்) அக்ராஸனதிபதியான யமகாடாபிரபு என்பவரும், வேறு பல அரண்மனை அதிகாரிகளும் ராஜிநாமாக் கொடுத்து விட்டார்களென்று தெரிகிறது. இதன் காரணம் யாதென்றால் பூர்வகால முதலாக ஐந்து பழைய குடும்பங்கள்லிருந்து மட்டுமே சக்ரவர்த்தி வம்சத்தார் பெண்ணெடுப்பது வழக்கமாக நடை பெற்று வந்திருக்கு இப்போது அந்த வழக்கத்துக்கு மாருகப் பட்டத்திளவரசருக்கு அவ்வைந்து குடும் பங்களில் சேராத சேனதிபதி கூனி இளவரசர் என் பவரின் மகள் இளவரசி நாகாகோ என்பவளை மணம் புரிய நிச்சயித்திருப்பதேயாம். ஜப்பானியப்