பக்கம்:பாரதித் தமிழ்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாரதியார் வாழ்க்கை வரலாறு

55


போடு அவரை ஏற்றுக்கொண்டது மீண்டும் அதன் உதவியாசிரியரானர்.

இரண்டாம் முறை அவர் சுதேசமித்திரனில் சேர்ந்த காலம் நிச்சயமாகத் தெரியவில்லை. 1920 ஏப்ரல் 9-ஆம் தேதி ஸ்ரீ வ. வெ. சு. ஐயர் புதுச்சேரியிலிருந்து சென்னைக்கு வருகிறர். அன்று சென்னையில் அவருக்குப் பெரிய வரவேற்பு நடந்தது. பலர் அவரைப் பாராட்டிப் பேசியிருக்கிறார்கள். பாரதியார் அது சமயம் சென்னையில் இல்லையென்றும் தெரிகிறது. அக்டேபேர் இறுதியில் காரைக்குடி சென்றிருந்தார் 1920 நவம்பர் 15-ஆம் தேதியிலிருந்து சுதேசமித்திரனில் தொடர்ந்து அநேகமாக நாள்தோறும் குறிப்பு, ரஸத்திரட்டு, விநோதத் திரட்டு என்பன போன்ற தலைப்புக்களுடன் பாரதியார் எழுதுவதைப் பார்க்கும்போது அவர் அது சமயந்தான் மறுபடியும் உதவியாசிரியராக வேலை ஏற்றுக்கொண்டிருக்கலாம் என்று தோன்றுகிறது.

இவ்வாறு அவர் எழுதும் குறிப்புகள் பொதுவாக இந்திய அரசியலைப்பற்றி மட்டுமல்லாமல் வேறு விஷயங்களைப் பற்றியும், ஐர்லாந்து, துருக்கி போன்ற பிற நாடுகளைப் பற்றியும், முதல் உலகயுத்தத்தின் விளைவாகத் தோன்றிய நிகழ்ச்சிகளைப் பற்றியும் இருக்கின்றன.

உலக விஷயங்களைப் பற்றி எழுதும்போதும் ஆங்கிலேயரைத் தாக்கியும், தாய்நாட்டு விடுதலைக்கு ஆர்வமூட்டக்கூடிய ஐரிஷ் சுதந்தரப் போராட்டம் போன்ற நிகழ்ச்சிகளைப் பற்றியும் அவர் முக்கியமாக எழுதுகிறர்.

இக்குறிப்புக்களெல்லாம் தனித்தனி இலக்கியப் படைப்பல்லவென்றாலும். பாரதியாருடைய அரசியல் ஞான விரிவையும். கருத்துக்களையும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/55&oldid=1539735" இலிருந்து மீள்விக்கப்பட்டது