பக்கம்:பாரதித் தமிழ்.pdf/56

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 பாரதி தமிழ்

கொள்கைகளையும் எழுத்துத் திறமையையும் இவை நமக்கு நன்கு எடுத்துக்காட்டுகின்றன. சக்தி வாய்ந்த எழுத்து நடையையும், வசையுரை, நகைச்சுவை, முதலியவற்றையும் ஆங்காங்கு இவை நன்கு வெளிப் படுத்துகின்றன. அந்தக் காலத்து உலக நிலையையும் இவை நமக்கு ஒருவாறு புலப்படுத்துகின்றன.

இடையிடையே ரிஷிகள் கடன், மகாமகம் போன்ற அழகிய கட்டுரைகளும் எழுதிபிருக்கிரு.ர். சென்னைக்கு மீண்டபின் பாரதியார் பழையபடி பல கூட்டங்களில் பேசுவதைக் காண்கிருேம். . சில சமயங்களில் வெளியூர்களுக்குச் சென்று சொற் பொழிவுகள் நிகழ்த்துவதுமுண்டு. 1921 மார்ச் 25-ல் அவர் கூடலூர் சென்றிருக்கிரு.ர். அடுத்த ஆகஸ்டில் ஈரோட்டிற்கடுத்த கருங்கல்பாளையத்தில் மனித னுக்கு மரணமில்லை என்ற பொருள் பற்றி பேசியிருக் கிறார். அது விவரம் எனது ஈரோடு யர்த்திசை என்ற கட்டுரையில் கூறப்படுகிறது. அடுத்த நாள் ஈரோட்டில் இந்தியாவின் எதிர்கால நிலை என்று பொருள் பற்றிப் பேசியிருக்கிரு.ர். அதைப்பற்றி வேறொரு கட்டுரையில் எழுதுவதாகக் குறித்த பாரதியார் அதை எழுதவேயில்லை. அதற்குள் அவர் பேன ஒய்ந்துவிட்டது.

பாரதியாரின் உடல்நிலை மிகவும் சீர்குலைந்து விட்டதென்று முன்பே குறிப்பிட்டேன். அந்த நிலை யிலே திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் யானை அவரைக் கீழே தள்ளிக் காயமுண்டாக்கி விட்டது.

இரண்டாம் முறை சென்னைக்குத் திரும்பியதும் .பாரதியார் முதலில் தம்பு செட்டி தெருவில் சில மாதங்கள் வசித்தார். பிறகு திருவல்லிக்கேணி துளசிங்கப் பெருமாள் தெருவிலுள்ள ஒரு வீட்டிற் குக் குடி வந்தார். அடிக்கடி பார்த்தசாரதி சுவாமி