பக்கம்:பாரதித் தமிழ்.pdf/57

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதியார் வாழ்க்கை வரலாறு 57

கோயிலுக்குச் செல்லுவார். கோயில் யானைக்குப் பழம் தேங்காய் அன்புடன் அளிப்பார்.

அந்தக் கோயில் யானைக்கு மதம் பிடித்திருந்த ஒரு நாளிலே அது பாரதியாரை இழுத்துக் கூடத்திற் குள் தள்ளிவிட்டது. குவளைக் கிருஷ்ணமாச்சாரி யார் இதை எப்படியோ அறிந்து ஒரே பாய்ச்சலாக அங்கு வந்து பாரதியாரை வெளியில் எடுத்து வந் தார். பாரதியாருக்கு மண்டையிலும் உடம்பிலும் «95frtLI t.[).

காயம் ஆறிப் பாரதியார் பிழைத்தார். ஆனல் இந்தச் சம்பவ்த்துக்குப் பிறகு நெடுநாள் உலகில் வாழவில்லை. வயிற்றுக்கடுப்பு நோய் அவரை மரணப் பிடியாகப் பிடித்தது. இளேத்துப் போயிருந்த அவரு டைய உடம்பு இதன் பிடியை எதிர்த்துப் போராடி வெற்றி கொள்ளச் சக்தியற்று அதற்குப் பணிந்து விட்டது. 1921 செப்டம்பர் 10-ஆம் தேதி தேசபக்தன் ஆசிரியராகவிருந்த வ.வெ. சு. ஐயர் ராஜத்துவேஷத்திற்காகக் கைது செய்யப் பட்டார். கைது செய்யப்படு முன்பே அவர் ஆசிரியர் பதவியி னின்றும் விலகிவிட்ட போதிலும் தேசபக்தனில் இவர் இருந்த காலத்தில் வெளிவந்த ஒரு கட்டுரைக் காகச் சிறை புக நேர்ந்தது. சிறைக்குப் போகுமுன் ஐயர் நோய்வாய்ப்பட்டுக் கிடந்த பாரதியாரைப் பார்க்க வந்தார். அடுத்த நாள் இரவு சுமார் 1-30 மணிக்கு பாரதியாரின் தூல வாழ்க்கை முடிவுற்றது.

பாரதியாரின் பிரிவைக் குறித்துச் சுதேசமித்திர னில் 1921 செப்டம்பர் 12-ஆம் தேதியில் ஒரு குறிப்பு வெளியாகியிருக்கிறது : “ தமிழ் நாடு போற்றும் பூரீ சுப்பிரமணிய பாரதியார் இவ்வுலக வாழ்வை நேற்றிரவு துறந்து விண்ணவருக்கு விருந்தாகி விட் டார் என்ற செய்தியை அறிவிக்க நமது மனம் பதறு கிறது. சில தினங்களாக ಘೀ, வருந்திக்கொண்