பக்கம்:பாரதித் தமிழ்.pdf/60

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


60 பாரதி தமிழ்

மனப்பான்மையையும் காண்கிரு.ர். அவற்றைப் போக்கி மக்களைத் தட்டியெழுப்ப வேண்டு மென்று துடிக்கிறார். பாரத நாட்டின் பெருமையை யும், தமிழ் நாட்டின் பெருமையையும், தமிழ்மொழி யின் தனிப் பெருமையையும் பாடுகிரு.ர். தாமாக எழுதிய கவிதைகளோடு பங்கிம்சந்திரர் எழுதிய “ வந்தேமாதரம்” என்ற அமரகீதத்தின் மொழி பெயர்ப்பும், மாஜினியின் பிரதிக்னேயை அடிப்படை யாகக் கொண்ட வீரப் பாடலும் உருவாகின்றன.

மன்னும் இமயமலையெங்கள் மலேயே மாநில் மீத்து போற் பிறிதிலேயே என்று பாரத நாட்டுப் பெருமையை விவரிக்கிறார்,

வாழிய செந்தமிழ் வாழ்க்நற் றமிழர் வாழிய பாரத மணித் திருந்ாடு என்று நாட்டு வாழ்த்துப் பாடுகிரு.ர்.

இப் பாடல்களெல்லாம் 1908 ஜனவரிக்கு முன்பே வெளிவந்தவை. 1904-ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் சென்னைக்கு வந்து சேர்ந்த பாரதியார் மூன்று ஆண்டுகளிலே தேசீயக் கவியாகப் பெரிதும் முன்னேறிவிட்டார். இப்பாடல்களிலே நந்தனர் சரித்திரக் கீர்த்தனைப் பாடல்களின் மெட்டுக்களையும் (இவ்ற்றை நந்தனர் கீர்த்தனை அனுகரணப் பாடல் கள் என்று பாரதியாரே குறிப்பிட்டிருக்கிறார்) ஆநந்தக் களிப்பு, கிளிக்கண்ணிகள் முதலான இசைப் பாடல் வகைகளையும் காணலாம். இப்பாடல்களைப் எழுதுவதற்கு முன்பே எழுதிய சில பாடல்களைப் பார்த்தால் அவைகளுக்கிடையேயுள்ள வேறுபாடு நன்கு தெரியும். 1906 செப்டம்பரில் எழுதிய ‘யான்’ “சந்திரிகை” என்ற சானெட்டுக்களைப் படிக்கும் போது இந்த வேறுபாடு நன்கு தெளிவாகின்றது. 1906-ல் வேல்ஸ் இளவரசருக்கு நல்வரவு கூறி எழுதிய ஆசிரியப்பாவில் யாஅன் எறிவதாஉம்'