பக்கம்:பாரதித் தமிழ்.pdf/61

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பாரதி தமிழ் 61

என்பன போன்ற அளபெடைகளெல்லாம் வரு கின்றன. ஆரம்பநிலைப் பாடல் என்பதை அதிலே நன்கு காணலாம்.

இந்திய பத்திரிகையில் தமது விருப்பம்போல் யாதொரு தடையுமின்றி எழுதத் தொடங்கிய காலத்திலே அவருடைய கலைத் திறமை நன்கு அமைந்துவிட்டது. அது புதுச்சேரி வாழ்விலே மெரு ேக றி, “குயில் பாட்டு’, ‘கண்ணன் பாட்டு’, “பாஞ்சாலி சபதம் முதலிய பாடல்களில் பூரண மடைகிறது.

பாரதியாரின் கவிதையைப் படிக்கும்போது முதலிலே நமக்குத் தோன்றுவது அதன் எளிமையும் உணர்ச்சி வேகமுமேயாகும். அடிமைப்பட்டுக் கிடக் கும் நாட்டிற்கு விடுதலை வேண்டும் என்று அவர் உள்ளம் பொங்குகிறது. அவருக்கு இயல்பாக அமைந்துள்ள கவிதைத் திறமையிலே அ ந் த உணர்ச்சி உண்மையான உருப் பெறுகிறது. உள்ளத் திலே தெளிவிருக்கும்போது அது தெள்ளிய எளிய முறையிலே அனைவருக்கும் புரியும்படியாக வெளியா கின்றது; அந்தத் தெளிவும் உணர்ச்சியும் இல்லாத போதுதான் வார்த்தைகள் நேராக வருவதில்லை; பின்னிக்கொள்கின்றன; மனப்பாடம் .ெ ச ய் த நிகண்டுகளைத் தஞ்சம் புக நேரிடுகிறது.

ஆதலால்தான், “மடாலயங்களிலும், சமஸ் தானங்களிலும், பண்டிதர்களிடையேயும் தேங்கி வளர்ச்சி குன்றிக்கிடந்த தமிழைக் காப்பாற்றித் தேசீய வாழ்க்கையின் முன்னணிக்குப் பாரதியார் கொண்டு வந்தார்’ என்று அவரைப் புகழ்கிறார்கள். கவிதையைப்பற்றிப் பாரதியார் புனர்ஜன்மம்’ என்ற கட்டுரையிலே தமது கருத்தைத் தெளிவாக விளக்கியிருக்கிரு.ர். “நமது கவிதையிலே ஆனந்தம் குறையத் தொடங்கிற்று. ருசி குறைந்தது. கரடு