பக்கம்:பாரதித் தமிழ்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64

பாரதி தமிழ்


நோக்கம். விண்ணப்பம் தொடங்குகிறது: “எமது தாய் நாடாகிய பாராதாம்பிகையின் பெருமையை வருணித்து ஆங்கிலத்திலும் தமிழிலும் பல்வேறு காலத்துப் பல்வேறு புலவர்களால் பாடப்பெற்ற செய்யுள் மணிகளை ஒர் மாலையாகப் புனைந்து பதிப்பிக்கக் கருதியிருக்கின்றேனுதலின் பண்டைத் தமிழ் நூல்களில் பாரத நாடு முழுதினேயும் ஒருங்கே புகழ்ந்து கூறப்பட்டிருக்கும் பாடல்களை அறிஞர் தெரிந்தனுப்புவார்களாயின் அவர்மாட்டு மிக்க கடப்பாடுடையவளனுவேன்.’

இதைப் படிக்கின்ற மூச்சிலேயே பாஞ்சாலி சபதத்திற்குப் பொருள் விளக்கக் குறிப்பாகப் பாரதியார் எழுதிய சூர்யாஸ்தமன வருணனையையும் படித்துப் பாருங்கள்.

“பார்! ஸூர்யனைச் சுற்றி மேகங்களெல்லாம் தீப்பட்டெரிவது போலத் தோன்றுகிறது! ஆஹா! என்ன வர்ணங்கள்! எத்தனை வித வடிவங்கள்! எத்தனை ஆயிர விதமான கலப்புகள்! அக்கினிக் குழம்பு! தங்கம் காய்ச்சி விட்ட ஓடைகள்! எரிகின்ற தங்கத் தீவுகள்!

நீல ஏரிகள்! கரும் பூதங்கள்! எத்தனை வகை நீலம்! எத்தனை விதச் செம்மை எத்தனை வகைப் பசுமை! எத்தனை வகைக் கருமை! நீல ஏரியின்மீது மிதக்கும் தங்கத் தோணிகள்: எரிகின்ற தங்க ஜரிகைக் கரை போட்ட கரிய சிகரங்கள்! தங்கத்திமிங்கலங்கள் மிதக்கும் கருங்கடல்! எங்கு பார்த்தாலும் ஒளித் திரள். வர்ணக் களஞ்சியம். போ, போ, என்னுல் அதை வர்ணிக்க முடியாது.”

அல்லது “கண்கள்’ என்ற கட்டுரையில் நேரே உற்றுப் பார்ப்பதைப் பற்றிப் பாரதியார் கூறு வதைப் பாருங்கள். நேரே பார்த்தால் விரோதக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/64&oldid=1539932" இலிருந்து மீள்விக்கப்பட்டது