பக்கம்:பாரதித் தமிழ்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

66

பாரதி தமிழ்


காலம். தாதாபாய் நெளரோஜியும், திலகரும் விடுதலைப் போராட்டத்தை உருவாக்கிய காலம் அது. சுவாமி விவேகாநந்தர் ஒரு புதிய விழிப்பை உண்டாக்கிய காலம் அது. அரசியல், சமூகம் முதலியவற்றில் இப்பெரியார்களின் கருத்துக்களும், இவர்கள் விரும்பிய மாறுதல்கள், சீர்திருத்தங்களைப் பற்றிய பேச்சுக்களும் நாடெங்கும் ஒலித்தன. பாரதியாருடைய கவிதைகளிலும் கட்டுரைகளிலும் அவற்றின் தெளிவான, ஆழ்ந்த பிரதிபலிப்பைக் காணலாம். அவருடைய கவிதைக் குரல் அக் கருத்துக்களுக்குப் புது வலிமையையும் அழகையும் கொடுக்கிறது. கவிஞரே அவற்றைப் புதிதாகக் கூறுவது போன்று உணர்ந்து மக்கள் அவற்றில்லயித்து விடுகிறார்கள்.

பாரதியாரின் அந்திய காலத்தில்தான் காந்தியடிகள் தென்னப்பிரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு வெற்றியுடன் திரும்பி வந்து இந்திய அரசியலில் பங்கு கொள்ளத் தொடங்குகிறார். அன்பு, அஹிம்சை என்ற காந்தியக் கருத்துக்கள் அரசியல் விவகாரங்களிலே அதுவரை நாட்டில் பரவவில்லை. அரசியலிலே அவற்றைப் புகுத்தும் துணிச்சல் பெரியதோர் அளவிலே காந்தியடிகளுக்குத்தான் வந்தது. அதை அவர் அப்பொழுது தென்னப்பிரிக்காவிலே வெற்றி கரமாகச் சோதனை செய்துகொண்டிருந்தார். பாரதி யாருக்கு அரசியல் தலைவர் திலகர், காந்தியடிகளல்ல. இந்த அடிப்படை உண்மையை மனதில் வைத்துக் கொண்டு பாரதியாருடைய தேசீயப் பாடல்களைப் படிக்கவேண்டும்.

திலகரை ஆர்வத்தோடு பின்பற்றிய பாரதியார் ஆரம்ப காலத்தில் காந்தியடிகள் கூறிய கருத்துக்கள் சிலவற்றை ஆமோதிக்காததோடு தமது மாறுபட்ட கருத்துக்களை விளக்கி வெளிப்படையாக எழுது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/66&oldid=1539791" இலிருந்து மீள்விக்கப்பட்டது