பக்கம்:பாரதித் தமிழ்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாரதியாரின் பத்திரிகைத் தொண்டு

79




இந்தியா ஆபீஸில் ஸ்ரீ ஸ்ரீனிவாசாசாரியாருக்கு எழுதிப் பெற்றுக்கொள்க.

அதன் விலை அணு மூன்று.

இதே இதழில் ஞானரதத்தில் கந்தர்வ் லோகம் என்ற பகுதியில் கடற்கரை என்ற உட்பிரிவு தொடங்குகிறது. ஆதலால் இந்நூலில் ஒரு சிறு பகுதியே சென்னையிலிருந்து வெளியாகியிருக்கலாம் அல்லது தொடக்கம் முதல் புதுச்சேரியிலிருந்து வெளியாகியிருக்கலாம் என்று தோன்றுகிறது. இந்தியாவின் இதழ்கள் அனைத்தையும் பார்க்க இயலாமையால் இதை நிச்சயமாகக் கூற முடியவில்லை.

இந்தியாவில் காரிபால்டியின் வாழ்க்கை வரலாறு, ராணி லக்ஷ்மியாய் சரித்திரம், லண்டன் கடிதம் முதலானவற்றை வ.வெ.சு.ஐயர் லண்டனில் இருக்கும்போதே எழுதி வந்தார். தேசிய உணர்ச்சியைப் பெருக்கும் இத்தகைய விஷயங்களும் செய்திகளும் கட்டுரைகளுமே இந்தியாவில் அதிகமாக இடம் பெற்றன.

தேச விடுதலைக்கு யார் யார் தீவிரமாக உழைக்கவில்லையோ அவர்களையெல்லாம் தாக்கி எழுதுவதில் பாரதியார் கொஞ்சமும் தயங்கவில்லை. மிதவாதிகள் பலமுறை அவருடைய கூரிய சொல்லம்பிற்கு ஆளாகிறார்கள். அன்னிபெஸன்ட் அம்மையாரைப் பற்றியும் அக்காலத்தில் பாரதியாருக்கு நல்ல அபிப்பிராயம் இல்லை. அவரையும் தாக்கி எழுதியிருக்கிறார்.

கார்ட்டூன் சித்திரம் வரைந்து, முக்கிய விஷயங்களை விளக்குதல் அல்லது யாரையாவது கேலி செய்தல ஆகிய முறையைத் தமிழ்ப்பத்திரிகையில் பாரதியார் அப்பொழுதே கையாள்கிறார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/79&oldid=1539764" இலிருந்து மீள்விக்கப்பட்டது