பக்கம்:பாரதியாரின் நகைச்சுவையும் நையாண்டியும்.pdf/130

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


126 கொண்டு, அவர்கள் கொடுத்ததை வாங்கி வயிறு வளர்ப் பவன் நாய். கண்ட விஷயங்களிலெல்லாம் திடீர் திடி என்று கோபமடைகிறவன் வேட்டைநாய். காங்கிால் சபையிலேயும் சேர்ந்து கொண்டு, ஆங்கிலேய அதிகார் களுக்கும் ஹிதமாக நடக்க வேண்டுமென்ற விருப்பு முடைய மேத்தா கட்சியைச் சேர்ந்தவன் வெளவால் அறிவுத் துணிவால் பெரும் பொருள்களைத் தேர்ந்து கொள்ளாமல், முன்னேர் சாஸ்திரங்களைத் திரும்பத் திரும்ப வாயில்ை சொல்லிக் கொண்டிருப்பவன் கிளிப் பிள்ளை. பிறர் தன்னை எவ்வளவு அவமதிப்பதாக நடத்திய போதிலும், அவன் அக்கிரமத்தை நிறுத்த முயலாமல் தனது மந்தகுணத்தால் பொறுத்துக் கொண்டிருப்பவன் கழுதை. வீண் மினுக்கு மினுக்கி டம்பம் பாராட்டு கின்றவன் வான்கோழி. கல்வியறிவில்லாதவனை மிருக்கி கூட்டத்திலேயும் சேர்க்கலாகாது; அவன் துரண். தான் சிரமப்படாமல் பிறர் சொத்தை அபக்ரித்து உண்ணுபவன் கழுகு. ஒர் நவீன உண்மை வரும்போது, அதைஆவலோடு அங்கீகரித்துக் .ெ கா ள் ளா ம ல் வெறுப்படைகிறவன் (வெளிச்சத்தைக் கண்டு அஞ்சும்) ஆந்தை. ஒவ்வொரு நிமிஷமும் சத்தியமே பேசித் தர்மத்தை ஆதரித்துப் பரமார்த்தத்தை அறிய முயலுகிறவனே மனித னென்றும் தேவனென்றும் சொல்வதற்குரியவனவான் மிருக ஜன்மங்களை நாம் ஒவ்வொருவரும் கூடிண ந்தோறும் நீக்க முயலவேண்டும். இந்தியாவில் விதவைகளின் பரிதாபகரமான நிலைமை குறிப்பு : 'கொடிய வெந்நாக பாசத்தை மாற்றி மூலிகை கொணர்ந்தவன் என்கோ? இடிமின்னல் தாங்கும் குடை செய்தான் என்கோ? என்சொலிப் புகழ்வதில்