44
முதலிய பல பல காரணங்களால் போஜனமும் உங்களுக்கு ஸித்தியாய் விடும். தைர்யமா வேலை செய்யுங்கள்."
பாரதியார் தமது அரசியல் கட்டுரைகளிலே கிண்ட செய்தும் குத்தியும் பழித்தும் காரசாரமாக எவ்வாறு எழுதினார் என்பதற்கு ஓர் அரிய எடுத்துக்காட்டா விளங்குகின்றது அவர் 1907ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் தேதி எழுதிய கட்டுரை. சென்னைவாசிகளில் நிதானமும்,விபின சந்திர பாலரின் சந்நிதானமும் என்பது அதன் தலைப்பாகும். விபின சந்திரபாலர் வங்காளத் தேசீய வீரர்களில் ஒருவர். சிறந்த பேச்சாளர். இந்தியாவின் ஒரு கோடியிலிருந்து மற்றொரு கோடி வரையில் அந்தக்காலத்தில் அவரது பேச்சு ஒலித்தது. மக்கள் அக்தைகேட்டுப் புது உணர்ச்சி பெற்றனர். 1907 அவர் சென்னையில் பேசிய பேச்சு மக்கள் மனத்தில் தேசீய நெருப்பை ஓங்கி வளர்த்தது. அதனால் சென்னை மாகாணத்தை விட்டு வெளியேறும்படி சர்க்கார் அவரை வலுக்கட்டாயப்படுத்தியது.
அவருடைய பேச்சும், நியூ இந்தியா, வந்தே மாதரம் என்ற பத்திரிகைகளில் அவர் எழுதிய கட்டுரைகளும் இளைஞர்களின் உள்ளத்தைப் பெரிதும் கவர்ந்தன. இதையே பாரதியார் இக்கட்டுரையில் குறிப்பாக எடுத்துக் கூறுகிறார்.
இச் சிறிய குறிப்புடன் இனிப் பாரதியாரது கட்டுரையைப் பார்ப்போம்.
சென்னை வாசிகளின் நிதானமும்
விபின சந்திரபாலரின் சந்நிதானமும்
18 மே 19~
சென்னை வாசிகளின் நிதானமெல்லாம் சந்திரபாலரின் சந்நிதானத்திலே பறந்து காற்றாய்ப் போய்விட்ட.