உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாரதியாரின் நகைச்சுவையும் நையாண்டியும்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

72


ருதுவான பிறகு கலியாணம்

“ருதுவான பிறகு, பெண்ணுடைய இஷ்டப்படி கலியாணம் செய்யவேண்டும்; புருஷன் கொடுமையை சகிக்க முடியாமலிருந்தால், ஸ்திரீ சட்டப்படி அவனை த்யாஜ்யம் செய்துவிடச் சட்டமும் இடம் கொடுக்க. வேண்டும்; ஊர்க்காரரும் தூஷணை செய்யக்கூடாது. பெண் உழைத்துச் சாப்பிட முடியாது. அந்த விஷயத்தில் ஐரோப்பிய ஸ்திரீ ஸ்வதந்திர முயற்சிக்காரருடைய அபிப்யிராயத்திலிருந்து என் அபிப்பிராயம் பேதப்படுகிறது. பெண்ணை ஸம்பாத்யம் பண்ணிப் பிழைக்கவிடக் கூடாது. அவளுக்கு பிதுரார்ஜியத்தில் பாகமிருக்க வேண்டும். கலியாணம் செய்து கொண்டால் புருஷனுடைய சொத்து அவளுடையதாகவே பாவிக்க வேண்டும்.

பெண்ணுக்கு மரியாதை

பெண்டாட்டி கையில் காசு கொடுக்கக் கூடாதென்று சொல்லுகிற மனுஷ்யர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். பெண் அவளிஷ்டப்படி சஞ்சரிக்கலாம். தனி இடங்களில் ஸ்திரீகளைக் கண்டால் மரியாதை செய்து வணங்க வேண்டும். அப்படி எந்தப் புருஷன் மரியாதை செய்ய வில்லை யென்று தோன்றுகிறதோ, அவனை கிருகஸ்தர்கள் நெருங்கக் கூடாது. அவன்கூட ஒருவனும பேச்சு வார்த்தை வைத்துக் கொள்ளாமல் இருந்துவிட வேண்டும். அப்படி வீதி வழியோ, கடைத் தெருவோ, ரயில் வழியோ, காசிப் பட்டணமோ ஸ்திரீகள் தனியே போகுலும், புருடர் கண்டு வணங்கும்படி ஏற்பாடு செய்வது நாளது தேதியில் இந்த தேசத்தில் வெகு கஷ்டம். என்ன செய்யலாம்? ஹிந்துகளிலே நூற்றுக்குத் தொண்ணூறு பேர் மூட ஜனங்கள் அது எப்படி நாசமாய் போனாலும், படித்துக் கௌரவ-