பக்கம்:பாரதியாரின் நகைச்சுவையும் நையாண்டியும்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 லிருந்து, அந்த வேதவல்லி அம்மைக்குக் கோபம் உண்டாகி 'நான் இவரைக் குறிப்பிட்டு ஒன்றும் சொல்லுவதில்ல்ை யென்றும், இவர் சும்மாயிருக்கவேண்டும் என்றும், ஆரம் பத்தில் செய்யப்பட்ட தீர்மானத்தை இவர் அதற்குள்ளே மறந்து விட்டார்” என்று சொல்லி வெறுப்புடன் எழுந்து போய்விட்டார். நான் எத்தனையோ சமாதானம் சொல்லியும் கேட்க வில்லை. ராமராயர் இருக்கும் சபையிலே தான் இருக்க லாகாது’ என்று சொன்னுள். அந்த அம்மை சென்றபிறகு ராமராயர் ஏதோ முணுமுணுத்துக் கொண்டிருந்தார். 'என்ன சொல்லுகிறீர்?’ என்று கேட்டேன். ஸ்திரீகளுக்கு விடுதலை கொடுப்பது மிகவும் அவசியத் திலும் அவசியம் என்று ராமராயர் சொன்னர். பிறகு மறுபடி சங்கர பாஷ்யத்தில் இறங்கி விட்டோம். பெண் விடுதலை (2) அடிமைகள் யாராயினும், அவர்களுக்கு விடுதலை கொடுத்தால், அதிணின்றும் யுகப்பிரளயம் நிச்சயமாகி நேரிட்டு, அண்டச் சுவர்கள் இடிந்துபோய், ஜகத்தே அழிந்துவிடும் என்று சொல்லுதல் அவர்களை அடிமைப் படுத்தி ஆள்வோருடைய ஸம்பிரதாயம். இருபது முப்பது வருஷங்களுக்கு முன்பு, பெண் கல்வி ஏற்பட்டால் மாதர் ஒழுக்கத்தில் தவறி விடுவார்களென்று தமிழ் நாட்டில் பலர் கூறினர். இப்போதோ, பெண் கல்வி தமிழ் நாட்டில் சாதாரணமாகப் பரவியிருக்கிறது. அண்டச் சுவர்கள் இன்னும் இடிந்து போகவில்லை. இதுவரை கூடிய மட்டும் பத்திரமாகவே இருந்து வருகின்றன. ஆனால், இப் பொழுது பெண்களுக்கு விடுதலை கொடுத்தால், ஏழு லோக மும் கட்டாயம் இடிந்து பூமியின்மேல் விழும் என்றும்: