பக்கம்:பாரதியாரின் நகைச்சுவையும் நையாண்டியும்.pdf/87

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


83 வால் நrத்திரம் வகையராக்களெல்லாம் நடுவிலே அகப் பட்டுத் துவையலாய் விடும் என்றும் பலர் நடுங்குகிருர்கள். மதருஸ் மெயில் போன்ற ஆங்கிலேயப் பத்திராதிபதி யிடம் போய் இந்தியாவிற்கு சுயராஜ்யம் கொடுத்தால் என்ன நடக்கும் என்று கேளுங்கள். "ஓஹோ ஹோ! ஹோ இந்தியாவிற்கு சுயராஜ்யம் கொடுத்தால் பஞ்சாபிக்ள் ராஜபுத்திரரைக் கொல்வார்கள். பிறகு, ராஜபுத்திரர் மஹாராஷ்டிரரின் கூட்டத்தையெல்லாம் விழுங்கிப் போடுவார்கள். அப்பால், மஹாராஷ்டிரர் தெலுங்கரையும் கன்னடரையும் மலையாளிகளையும் தின்று விடுவார்கள். பிறகு மலையாளிகள் தமிழ்ப் பார்ப்பாரையும், தமிழ்ப் பார்ப்பார் திராவிடரையும் சூர்ணமாக்கி விடுவார் கள். சூர்ணித்த திராவிடர் வங்காளி எலும்புகளை மாலை யாகப் புனைவர்' என்று சொல்லிப் பெருமூச்சு விடுவார். அதே கேள்வியை நீதிபதி மணி அய்யர், கேசவப் பிள்ளை, சிதம்பரம்பிள்ளை முதலியவர்களைப் போய்க் கேளுங்கள். "அப்படி பெரிய அபாயம் ஒன்றும் உண்டாகாது. ஸ்வராஜ்யம் கிடைத்தால் கஷ்டம் குறையும். பஞ்சம் வந்தால் அதைப் பொறுக்கத் திறன் உண்டாகும். அகால மரணம் நீங்கும் அவ்வளவுதான்' என்று சொல்லு வார்கள். அதுபோலே, பெண்களுக்கு விடுதலை கொடுத்த தல்ை ஜன சமூகம் குழம்பிப் போய்விடும் என்று சொல்லுவோர் பிறர் தமது கண்முன் ஸ்வேச்சையுடன் வாழ்வதை தாம் பார்க்கக் கூடாதென்ற அசூயையால் சொல்லுகிருர்களே யொழிய வேருென்றுமில்லை. விடுதலை என்ருல் என்ன அர்த்தம்? விடுதலை கொடுத்தால் பிற ஸ்திரீகள் என்ன நிலையில் இருப்பார்கள்? பெண்களுக்கு விடுதலை கொடுக்க வேண்டும் என்ருல் என்ன செய்யவேண்டும்? வீடுகளை விட்டு வெளியே துரத்திவிடலாமா? செய்யவேண்டிய