பக்கம்:பாரதியாரின் நகைச்சுவையும் நையாண்டியும்.pdf/98

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


94 அவர் பெரிய மிராசாம். அவருக்கு ஒரு பெண்தாளும் கால் முதல் தலைவரை அந்தப் பெண்ணுக்கு வயிர நகை சொரிந்து கிடக்கிறதாம். தேவ ரம்பையைப் போல் அழகாம் அந்தப் பெண்” என்ருள். "அப்படிப்பட்ட அழகான பணக்கார இடத்துப் பெண்ணை, இளையாளாகக் கொடுக்கக் காரணி மென்ன? என்று பாட்டி கேட்டாள். அந்தப் பெண் திரண்டு மூன்று வருஷங்களாய்விட்டன. தாயும் இறந்து போய் விட்டாள். அதன் நடையுடை பாவனைகளெல்லாம் ஐரோப்பிய மாதிரி. ஆதலால் இதுவரை அதற்குச் கலியாணத்துக்கு யாரும் வரவில்லை. எங்கப்பா அந்த ருதுவான வார்த்தையெல்லாம் வீண் பொய்யென்று சொல்லித் தாம் கல்யாணம் பண்ணிக்கொள்ள ஸம்மதப் பட்டு விட்டார். மேலும் இவருக்கு மனதுக்குள்ளே ஸ்ந்தோஷந்தான், தமக்கு ருதுவான பெண் கிடைப்பது பற்றி. இன்றைக்குக் காலையிலேகூட அவரும் எங்கம்மாவும் பேசிக் கொண்டிருந்தார்கள். நாங்கள் இந்த ஊர்ச் சத்திரத்திலேதான் ஒரு வாரமாக இறங்கியிருக்கிருேம்: எங்க்ப்பாவும் அம்மாவும் பேசிக்கொண்டிருந்தபோது, அம்மா சொன்னுள் : - மன்னர்குடிப் பெண் திரண்டு மூன்று வருஷமாய் விட்டதாக இந்த ஊரிலே கூடப் பலமான ப்ரஸ்தாபம். ஆண், பெண் எல்லோரும் ஒரே வாக்காகச் சொல்லுகிருர்கள்' என்ருள். அப்பா அதற்கு :-நெவர்மைண்ட். அந்தக் குட்டி திரண்டிருப் பதைப் பற்றி நமக்கு இரட்டை ஸ்ந்தோஷம். நமக்குப் பணம் கிடைக்கும். ஆண் பிள்ளை பிறக்கும். குட்டி ஏராளமான அழகு. இந்த மாதிரி இடத்திலே ஐ டோன் கேர் எடேம் எபெளட் சாஸ்திரங்கள். நாம் சாஸ்திரங் களைப் புல்லாக மதிக்கிருேம் என்ருர்......" என்று காந்தா மணி சொன்னுள்.