பக்கம்:பாரதியார் நூல்கள் ஒரு திறனாய்வு.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xii புத்தகமாக வெளியிட்டார். அதற்கு இணையான நூல் தமிழ் மொழியிலில்லை. சொற்சுவை, பொருட்சுவை நிரம்பியது. பாச்சுவை பரவிய நளின நடையால் அமைந்தது.' "ஞானரதம் முழுவதையும் திரும்பத் திரும்பப் படித்து அதன் சுவையை அனுபவிக்கவேண்டும். ஆதலால் அதிலிருந்து இங்கு மேற்கோள் காட்டாது, பாரதியாரின் சிறு சிறு வாக்கியங்களின் அழகிற்கு வேருேர் உதாரணம் காட்டுகிறேன். மாலை வேளையில் சூரியன் மறையுந் தறு வாயில் மேற்கு வானத்திலே தோன்றும் அழகைப் பாரதியார் வருணிக்கிருர் : 'பார்! ஸூர்யனைச் சுற்றி மேகங்களெல்லாம் தீப்பட்டெரிவது போலத் தோன்றுகிறது! ஆஹா! என்ன வர்ணங்கள்! எத்தனைவித வடிவங்கள்! எத்தனை ஆயிர விதமான கலப்புகள்! அக்கினிக் குழம்பு! தங்கம் காய்ச்சிவிட்ட ஓடைகள்! எரிகின்ற தங்கத் தீவுகள்! நீல ஏரிகள்! கரும் பூதங்கள்! எத்தனை வகை நீலம்! எத்தனைவிதச் செம்மை! எத்தனை வகைப் பசுமை! எத்தனை வகைக் கருமை! நீல ஏரியின்மீது மிதக்கும் தங்கத் தோணிகள்! எரிகின்ற தங்க ஜரிகைக் கரைபோட்ட கரிய சிகரங்கள்! தங்கத் திமிங்கிலங்கள் மிதக்கும் கருங்கடல்! எங்கு பார்த்தாலும் ஒளித்திரள் வர்ணக் களஞ்சியம்! போ, போ, என்னல் வர்ணிக்க முடியாது.” வர்ணிக்க முடியாது என்று கூறி அழகாக வர்ணிக்கும் திறமை அவரிடத்தில் சிறந்து காணப்படுகிறது. ஆழ்ந்த உணர்ச்சியும், நல்ல அனுபவமும், தெளிந்த எண்ணமும் இல்லாமல், சொல் அலங்காரத்தை வைத்துக்