பக்கம்:பாரதியார் நூல்கள் ஒரு திறனாய்வு.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

X}V கவனி! நல்ல பச்சைத் தமிழிலே சொல்லுகிறேன். ஆணுகிய நீ கும்பிடுகிற தெய்வங்களில் பெண் தெய்வம் எல்லாம், எனது தாய், மனைவி, சகோதரி, மகள் முதலிய பெண்களினிடத்தே வெளிப்படாமல் இதுவரை மறைந்து நிற்கும் பராசக்தியின் மகிமை யைக் குறிப்பிடுகின்றன. அம்மன் தாய். அவளைப் போலவே நம்முடைய பெண்கள், மனைவி, சகோதரி, மாதா முதலியோர் ஒளிவீச நாம் பார்க்கவேண்டும் என்பது குறிப்பு.’ உரைநடையைப்பற்றி பாரதியாரே எழுதியிருப்பதை கவனியுங்கள். அவர் கூறுகிருர்: 'தமிழ் வசன நடை இப்போதுதான் பிறந்து ப்ல வருஷமாகவில்லை. தொட்டிற் பழக்கம் சுடுகாடு மட்டும். ஆதலால் இப்போதே நமது வசனம் உலகத் தில் எந்த பாஷையைக்காட்டிலும், தெளிவாக இருக்கும்படி முயற்சிகள் செய்யவேண்டும். கூடியவரை பேசுவதுபோலவே எழுதுவதுதான் உத்தமம் என்பது என் ககதி. எந்த விஷயம் எழுதினாலும் சரி, ஒரு கதை அல்லது தர்க்கம், ஒரு சாஸ்திரம், ஒரு பத்திரிகை விஷ்யம், எதை எழுதினலும் வார்த்தை சொல்லுகிற மாதிரியாகவே அமைந்துவிட்டால் நல்லது...... சொல்லவந்த விஷயத்தை மனதிலே சரியாகக் கட்டிவைத்துக் கொள்ளவேண்டும். பிறகு, கோணல், திருகல் ஒன்றுமில்லாமல் நடை நேராகச் செல்ல வேண்டும்............ உள்ளத்திலே நேர் ைம் யு ம் தைர்யமும் இருந்தால், கை பிறகு தானகவே நேரான எழுத்து எழுதும். தைர்யம் இல்லாவிட்டால் வசனம் தள்ளாடும், சண்டிமாடு போல ஒரிடத்தில் வந்து படுத்துக்கொள்ளும். வாலைப் பிடித்து எவ்வளவு