பக்கம்:பாரதியார் நூல்கள் ஒரு திறனாய்வு.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 1910, மார்ச் 31-ம் தேதியன்று அரவிந்தர் உத்தர் பாராவைச் சேர்ந்த இளம் புரட்சியாளர்கள் செலுத்திய படகில் கல்கத்தாவை அடைகிருர். பிறகு ஜோதிந்தரநாத் மித்தர் என்ற புனைப்பெயருடன், S. S. டுப்ளே என்று அழைக்கப்பட்ட கப்பலில், ஏப்ரல் 1-ந் தேதி அதிகாலையில் பாண்டிச்சேரிக்குப் புறப்பட்டார். அக்கப்பல் 1910, ஏப்ரல் 4-ந் தேதி மாலை 4 மணிக்குப் புதுவைக்கு வந்து சேர்ந்தது. வ. வே. சு. ஐயரும் சுமார் ஐந்து ஆறு மாதங்களுக்குப் பின்பு பாண்டிச்சேரியில் தஞ்சம் புகுகின்ருர். தொடக்கத் தில் மகான் அரவிந்தரைப் பாரதியார் மாலையில் சந்தித்து அளவளாவுவார். இதுவே, அரவிந்தர் நடத்திய “கர்ம யோகின்' என்ற இதழை ஒட்டித் தமிழில் பாரதியார் நடத்தத் துரண்டுகோலாக அ ைம ந் தி ரு க் கி ற து. உபநிஷதங்களைத் தழுவிச் சித்தர்களுடைய வாக்குப்போல மறைபொருள் கொண்டதாகவும், டாகூருடைய அரவ வனப்பு உடையதாகவும் வசன கவிதை எழுதத் துரண்டி யிருக்கவேண்டும். டாகூருடைய வசன கவிதை சிந்தனை செல்வாக்குப் பெற்றிருந்தது. - ஆனல், பழைய கவிஞர்களின் கருத்துப்படி யமகம் முதலான யாப்பு வகைகளிலேயே அவர் முடங்கிக்கிடக்க வில்லை. நன்முக நாலாபக்கங்களிலிருந்தும், யாப்பு வகை களில் என்னென்ன பரிசோதனைகள் நடந்து வருகின்றன என்று விழிப்போடு நோக்கியிருக்கிரு.ர். "வால்ட் விட்மான் என்பவர் தலைசிறந்த கவிஞராகப் போற்றப் படுவதை இவர் நன்ருக உணர்ந்திருக்கிருர் அவரைப் பற்றி மகாகவி பாரதியாரே கூறுவதைக் கேளுங்கள்: "வால்ட் விட்மான் என்பவர் சமீப காலத்தில் வாழ்ந்த அமெரிக்கா (யுனைட்டெட் ஸ்டேட்ஸ்) தேசத்துக் கவி. இவருடைய பாட்டில் ஒரு புதுமை என்னவென்முல், அது