பக்கம்:பாரதியார் நூல்கள் ஒரு திறனாய்வு.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

& பாரதியார் இங்ங்னம் கிழக்கு, மேற்கு, தெற்கு ஆகிய மூன்று திசைகளிலும் உலகத்திலே என்னென்ன கவிதைப் பரிசோதனைகள் நடந்துவருகின்றன என்று கூர்ந்து கவனித்துவருகிருர்: 'இனி வடக்கிலே உள்ள பெல்ஜியம் நாட்டிலே எமீல் வெர்ஹேரன் (Emile verhaeren) என்று ஒரு கவி இருக்கிரு.ர். அவருடைய கவிதை புதுவழியாக இருக்கிறதென்று ஒரு பத்திரிகையில் வாசித்தேன். எப்படியென்ருல், இதுவரை உலகத்துக் கவிகள் நமது நவீன நகரங்களிலேயுள்ள யந்திர ஆலைகள், மோட்ட்ார் வண்டிகள் முதலிய வஸ்துக்களைத் தமது கவிதையிலே சேர்ப்பதில்லை. இந்த வஸ்துக்களிலே அழகில்லையாதலால் க வி ைத யி லே சேர்க்கத் தகாதன என்று நினைத்துக் கொண்டிருந்தார்கள். வானம், காற்று, நீர், வனம், மலை, பெண், செல்வம், மது, தெய்வம், தவம், குழந்தை முதலிய அழகுடைய வஸ்துக்களையே கவிகள் வர்ணிப்பது வழக்கம். எமீல் வெர்ஹேரன் என்பவருடைய கொள்கை. யாதென்ருல்:வலிமையே அழகு. ஒரு பொருளின் வெளியுருவத்தைப் பார்த்து அது அழகா இல்லையா என்று தீர்மானம் செய்யலாகாது. யந்திரங்களிலே வலிமை நிகழ்கின்றது. ஆதலால் அவை அழகுடையன. அவற்றைக் கவி புகழ்ச்சி செய்தல் தகும்." ‘உல்லாச'சபை என்ற கட்டுரையில் (29-3-1916) காளிதாஸளுகக் காட்சி அளிக்கும் பாரதியார் இதுபற்றித் தம் கருத்தைத் தெளிவாகத் தெரிவித்துவிடுகிருர்: "வலிமை ஒர் அழகு. அழகு ஒரு வலிமை. யந்திர ஆலை, நீராவி வண்டி, நீராவிக் கப்பல், வானத்தேர், பெரிய பீரங்கி எல்லாம் அழகுதான். உயர்ந்த கவிகள் வலிமை யுடைய பொருள்களை அவ்வக் காலத்தில் வழங்கிய வரை