பக்கம்:பாரதியார் நூல்கள் ஒரு திறனாய்வு.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23 முதலான பல தெய்வங்களையும் யாதொரு வேறுபாடும் இன்றி அழகாகப் பாடியிருக்கிருர். பொட்டல் புதுாரிலே, ஒரு சமயம் பாரதியாரிடம் இஸ்லாம் மார்க்கத்தின் மகிமை என்ற தலைப்பில் பேசச் சொல்லியிருக்கிறர்கள். அதை ஏற்றுக்கொண்டு பாரதியார், தாம் இயற்றிய 'அல்லா, அல்லா, அல்லா என்ற கவிதையை முதலில் வழக்கம்போலப் பாடிவிட்டு, பிறகு ஒரு சிறந்த சொற் பொழிவு ஆற்றியிருக்கிரு.ர். புதிய ஆத்திசூடி"யின் காப்புச் செய்யுளிலே, 'ஆத்தி சூடி, இளம்பிறை அணிந்து, மோனத் திருக்கும் முழுவெண் மேனியான், கருநிறங் கொண்டு பாற் கடல்மிசை கிடப்போன்; மகமது நபிக்கு மறையருள் புரிந்தோன்; இயேசுவின் தந்தை எனப்பல மதத்தினர் உருவகத் தாலே உணர்ந்துன ராது, பல வகை யாகப் பரவிடும் பரம்பொருள் ஒன்றே" என்று தெளிவாக யாதொரு ஐயத்திற்கும் இடமில்லாதபடி விளக்கிவிடுகின்ருர். பராசக்தியின் மேல் பாடல்கள் அதிகமாக உள்ளனவே என்ருல், அது இயல்புதான். தாம் விரும்பிடும் கடவுளைப்பற்றித்தானே எவரும் அதிகம் பாடுவார்கள். கண்ணம்மா, வள்ளி, திருமகள் முதலிய பல தெய்வங்களின்மேல் காதல் கொண்டதாக அவர் பாடுகின்ருர். ஆனால், பராசக்தியின்மேலே அப்படிக் கூறவில்லை. மூன்று காதல்’ என்ற மிக அழகான கவிதை யில், முதலிலே பிள்ளைப்பிராயத்தில் கலைமகளின்மேல் காதல் கொண்டதாகவும், இரண்டாவதாக, லட்சுமியின் மேல் காதல் கொண்டதாகவும் பாடுகிருர்; மூன்ருவதாக ஒரு கரும்பெண்மை அழகு வந்து நின்றதாகப் பாடுகிரு.ர். உடனே அவ்வுருவைப் பாரதியார் 'இது! அன்னை வடிவமடா! இவளுடைய அருள் கிடைத்துவிட்டால் செல்வங்கள் பொங்கிவரும்' என்று முழங்குகிருர், பின்பு,