பக்கம்:பாரதியார் நூல்கள் ஒரு திறனாய்வு.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 ஏற்ற சொல்லைக்கொண்டு நன்ருக உளத்தில் அழுந்துமாறு பாடி இருப்பதை நாம் நன்முகச் சுவைக்கலாம். மேடம் பீச்சல்ஸ்டோவி என்ற அமெரிக்க மாது படிப்பில்லாதவள். எழுது கலேயும் அறியாதவள். ஆனல், அவள், ஒரு நீக்ரோ பாதிரியைக் கல்லால் அடித்துக் கொன்ற மாபெரும் பாத கத்தை நேரிலேயே கண்டிருக்கிருள். அந்தக் கொடுமை யான காட்சி அவள் மனத்தில் ஆழப் பதிந்து, எப் பொழுதும் நீங்காத காட்சியாக அது இருந்துவிட்டது. காகிதத்தில் எழுதித் தள்ளினலொழிய அது உள்ளத்தை விட்டு நீங்காதபடி அங்கேயே சுழன்றுகொண்டிருந்தது. இறுதியில், எழுதியாவது ஆறுதல் பெறலாம் என்று எண்ணி எழுதத் துணிந்துவிட்டாள். காகிதமோ அதை வாங்குவதற்குக் காசோ கையில் இல்லை. மளிகைச் சாமான் கள் கட்டி வ ரு கி ன் ற பழுப்புக் காகிதத்திலே எழுதலானள். ஆனால், அவள் அதை தன் கணவருக்குக்கூடக் காட்ட வில்லை. அவ்வளவு நாணம் கேலி செய்வாரோ! என்ற தயக்கம் வேறு. ஆதலால், அவள் கணவர் வந்தவுடன் அவள் எழுதியவை திடீரென்று மேஜையின் இழுப்பறைக் குள் சென்றுவிடும். இப்படிப் பல நாள் நடந்தது. எத்தனை நாளைக்குத்தான் கணவருக்குத் தெரியாமல் மூடிவைக்க முடியும்? தன் மனைவி ஏன் இப்படிச் சட்டென்று மறைத்துக் கொள்கிருள்? அது என்ன என்று கண்டுபிடிக்கவேண்டும் என்று அவருக்கு ஆவல் உண்டாயிற்று. ஒரு நாள் அவர் தம் மனைவி வெளியில் சென்றிருந்த நேரம் பார்த்து, அவள் எழுதியதைப் படிக்கத் தொடங்கினர்; மனைவி திரும்பி வந்ததையும் கவனியாமல் ஆழ்ந்து படிக்கலானர். அவர் அழுதுகொண்டிருப்பதை அவர் மனைவி கவனித் தாா. ஒரே குழப்பமாகப் போய்விட்டது.