பக்கம்:பாரதியார் நூல்கள் ஒரு திறனாய்வு.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Vf 'ஞானரதம் மற்றுமுள்ள நகைச்சுவைக் கட்டுரைகள் முதலியவைகளால் நன்கு விளக்கிக் காட்டியுள்ளேன். ஆழ்வார் பாசுரங்கள் தெய்வ வாக்காயினும் அவற்றைக்கூட எப்படி மேடைக் காட்சிபோல எளிதாக நம் பாரதியார் விளக்கிக் காட்டியுள்ளார் என்பதற்குக் 'கண்ணம்மா என் காதலி' என்னும் கவிதையே சான்ரு கும். திருமதி யதுகிரிஅம்மாளின் தாத்தா பிரபந்தங்களில் மிக வல்லவர். வல்லவர் மட்டுமன்று, அதனைக் குழந்தை களுக்கும் புரியும்படியாக விளக்கிச் சொல்லும் ஆற்றல் படைத்தவர். பாரதியார் அந்த விளக்கங்களைக் கேட்டு, வாக்கு வாதமும் செய்வார். அடுத்த நாள் காலையிலேயே அதை ஒர் இனிய பாடலாக அமைத்துக் காட்டுவார். அல்லது அந்தப் பாசுரத்திற்கு இனிய இசை அமைத்துப் பாடிக் காண்பிப்பாராம் நம் மகாகவி. திருமதி யதுகிரி அம்மாளின் தாத்தாவிடம் கொண்ட நீண்ட தொடர்பு பாரதியாருக்கு வைணவ பிரபந்தங்களில் ஈடுபாடு ஏற்படக் காரணமாய் இருந்திருக்கலாம் என்று ஊகிக்க இடமிருக்கிறது. இது ஆராய்வதற்கு உரியது. பொதுவாக, என்னுடைய திறனாய்வுக்கு எது அவசியமோ அதைமட்டுந்தான் விளக்கியிருக்கிறேன். அதிகமாக விளக்கம் கொடுத்தோமானல் அது அந்த நூலின் சுவையைக் குன்றச் செய்துவிடும் என்பது எனது எண்ணம். பெரும்பாலும் எனது கவிதை நூல்களில் இந்த எண்ணத்தையே பின்பற்றி இருக்கிறேன். ஆகையால் வாசகர்கள் திறனாய்வு இவ்வளவுதான என்று குறைபட்டுக் கொள்ளக் கூடாது. வாசகர்களும் திறமையோடு தொடர்ந்து படிப்பதே மிகுந்த சுவை பயக்கும் என்று இன்னமும் கருதுகின்றேன். - ம, ப. பெரியசாமித் தூரன்