பக்கம்:பாரதியார் நூல்கள் ஒரு திறனாய்வு.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 காதலை மறந்து, அதன்மீது ஆசைப்படுவதே மனத்தின் இயல்பு. ஆசைக்கோர் அளவில்லை, அகிலமெலாம் கட்டி ஆளினும் கடல் மீது ஆணே செலுத்தவேண்டும் என்ற ஆசை கொள்கிறதல்லவா மனம்? ஆனல், பரமாத்மாவின் முன்னே இந்த அற்ப ஆசைகள் எல்லாம் நீங்கி, அவருடைய பாதமலர்களே சரணம் என்று அடைகின்றபோது, இந்தக் குறைகளெல் லாம் நீங்கிவிடுகின்றன. 'நன்றே செய்க, பிழை செய்க, நானே இதற்கு நாயகமே என்று மணிவாசகப்பெருமான் சரணம் அடைந்த போது, அவருக்கு உண்மையான ஞானம் ஏற்படுகின்றது. அதே போலக் குயிலாகிய மனம் "நீயே கதி, நீ என்ன வேண்டுமானலும் செய்துகொள்' என்று கவிஞருடைய கையில், விழுகின்றபோது, மனம் மிகத் தூய்மையாய்விடுகின்றது. அதுவே ஜீவாத்மாவும் பரமாத்மாவும் இரண்டறக் கலந்து ஐக்கியமாகும் பக்குவத்தை அடைகின்றதென்று சொல்லுகிருேம். "வேதாந்த மாக விரித்துப் பொருளுரைக்க யாதானுஞ் சற்றே இடமிருந்தாற் கூறிரோ?" என்னும் கேள்வியைக் கேட்டுவிட்டு அப்படியே நிறுத்திக் கொள்கிருர் பாரதியார். எளிமை எளிமை என்று சொல்லிவிட்டுப் பின்னல் எளியதாகவே தமிழ் மக்களுக்கு உணர்த்தும் வகையில் இந்தப் படைப்பையும் செய்திருக் கிருர் என்று சொல்லத் தோன்றுகிறது. ஆனல், இதை எளிமையின் தோற்றத்திலே உருவான, என்றும் இன்பம் தரவல்ல வைரமணி என்று கூசாமல் சொல்லலாம்.