பக்கம்:பாரதியார் நூல்கள் ஒரு திறனாய்வு.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞானரதம் பாரதியார், உரைநடைக்கு வழி காட் டி யாக "ஞானரதம்’ என்னும் கற்பனை நூலை மிக அழகாகப் படைத்திருக்கிருர், அதுபற்றி எஸ். ஜி. இராமானுஜலு நாயுடு "சென்றுபோன நாட்கள்' என்னும் கட்டுரையில் கூறுவதாவது: “ஞானரதம் என்ற தலைப்பெயருடன், தமிழ் நாடு என்றும் கண்டிராத, துள்ளிக் குதிக்கும் ஒரு புதிய கந்தர்வநடையில், இயற்கையின் அழகுகளைப்பற்றியும், தேசச் செய்திகளைப்பற்றியும், நெருங்கிய நண்பர்களின் மன மாறுபாடுகளைப்பற்றியும் அற்புதமான கற்பனையுடன் வாரந்தோறும் 'இந்தியா'வில் எழுதிவந்தார். அவற்றை ஒருங்கு சேர்த்து “ஞானரதம்' என்ற புத்தகமாக வெளியிட்டார். அதற்கு இ ணே யா ன நூல் தமிழ் மொழியில் இல்லை. சொற்சுவை, பொருட்கவை நிரம்பியது. பாச்சுவை பரவிய நடையால் அமைந்தது.” இந்நூல் சென்னையில் நிகழ்வதாக அமைக்கப் பெற்றி ருக்கிறது. திருவல்லிக்கேணியிலே, வீரராகவ முதலி தெருவில், ஒரு மாலை நேரத்தில், பாரதியார் சிரம பரிகாரத்தின் பொருட்டு ஒரு மஞ்சத்தில் படுத்திருப்பதாக நூலின் பீடிகை தொடங்குகிறது. ஞான ரதத்திலேறிப் பல 4