பக்கம்:பாரதியார் நூல்கள் ஒரு திறனாய்வு.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Ši மிகுந்ததுமான ஒரு நூல் என்பதை இவ்விருவர் கூற்றும் விளக்கிக் காட்டுகிறது. அதன் நகைச்சுவை பற்றி 'பாரதியாரின் உரைநடை என்னும் பகுதியிலேயே குறிப்பிட்டிருக்கிறேன். எண்ணங்களை நிறைத்துக்கொண்டு தமிழ் உரைநடையை நேராக, கோணல், திருகல் இல்லாமல் படிக்கச் சொன்னல் அதுவே சிறந்த உரை நடையாகும். ஞானரதத்திற்குப் பீடிகையாகச் சில கருத்துகளே வாசகர்களுக்குத் தெளிவாக்கும்பொருட்டுச் சுருக்கமாகக் கூறியுள்ளார். அதனையும் சேர்த்துத் தரப்படுமானல் எனது பணி செம்மையாக முடிந்துவிடும் என்று நம்பு கிறேன். எவ்வளவு லாகவமாகவும் எளிமையாகவும் பாரதியார் சொல்லுகிருர் பாருங்கள்: 'பின் மாலைப் பொழுது, திருவல்லிக்கேணி, வீரராகவ முதலி தெருவில் கடற்பாரிசத்தை நோக்கியிருக்கும் ஒர் வீட்டு மேடையின் மீது சிரமபரிகாரத்தின் பொருட்டு ஒர் மஞ்சத்தின்மீது படுத்துக்கொண்டிருந்தேன். ஆனந்தகரமான கடற்காற்று, நான் படுத்திருந்த மு ன் ன ைற யி .ே ல நான்கு பக் கங்க ளி லி ரு ந் தும் கண்ணுடிச் சாளரங்களின் மூலமாகவும், வந்து நிரம்பிய வண்ணமாக இருந்ததுஅந்தக் காற்றும் பின் மாலே ஒளியும் கலந்ததினால் உண்டாகிய தெளிவும் இன்பமும் என்னல் கூறி முடியாது. 'ஆஹா இப்போது போய் ஸ்நானம் செய்துவிட்டு, நேர்த்தியான ஒரு குதிரை வண்டியில் ஏறிக்கொண்டு, கடற்கரையோரமாகத் தெற்கே அடையாற்றுக்குப் போய், வழியெல்லாம் காளிதாஸனுடைய ச ா கு ந் த ல த் தையேனும், அல்லது ஒர் உபநிஷத்தையேனுங் கொண்டு போய்ப் படித்து இன்பமடைந்து கொண்டே திரும்பினல் நல்லது என்ற சிந்தனை உண்டாயிற்று. ஆனால், என்னிடம்