பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

TTTLLL LLLL LL LLLLL LLCLL LLLLLLL TTTT LLLSK LSLSLSLS S 0L

13.உழைப்பு:

உழைப்பு என்னும் தலைப்பில் பாரதியார் அருமையானதொரு கட்டுரை எழுதியுள்ளார். இது பற்றி அவர் கூறும் கருத்து இன்று மிகவும் பொருத்தமானது, அது என்றும் பொருத்தமானது.

“உழைப்பு எப்போதுமே உண்டு. தெய்வமே சரண் என்றிருப்போர் உள்ளத்திலே தாபம் இல்லாமல் உழைப்பார்கள் ஆனபடியால் அவர்களுடைய செய்கைக்கு வலிமை அதிகம், வேகம் அதிகம், உயர்வு அதிகம், அழகு அதிகம் பயன் அதிகம் என்று சொல்லாமலே விளங்கும்” என்றும், இன்னும், “உழைப்பு எப்போதும் உண்டு, இதிலே நான் என்னும் பாரத்தை நீக்கி விட்டு உழைத்தால் வேலை கிறு கிறு வென்று வேகமாகவும் பிழையில்லாமலும் நடக்கும். தன்னைத் துக்கித் தலையிலே வைத்துக் கொண்டு வேலை செய்தால் வேலை குழம்பும்” என்று பாரதி கூறுகிறார்.

ஒரு வேலையில் அதைச் செய்யும் ஒருவர், தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு இன்னும் தன்னை அர்ப்பணித்துக் கொண்டு அவ்வேலையைச் செய்தால் அவ்வேலை சிறப்பாக நடைபெறும், சிறப்பாக நிறைவு பெறும். இதையே பகவத் கீதை “நிஷ்காமிய கர்மம்” என்று குறிப்பிடுகிறது.

இன்று விடுதலை பெற்றுள்ள பாரதத்தில் நமது உழைப்பின் மூலம் பல முன்னேற்றங்கள் கண்டிருந்த போதிலும் பணிக் கலாச் சாரம் என்பது சில மட்டங்களில் சில பகுதிகளில் போதுமான அளவில் இல்லை என்று தான் கூற வேண்டியதிருக்கிறது.

வேலை நிறுத்த உரிமை வேண்டும் என்று கேட்பவர்கள் வேலை செய்யும் உரிமை வேண்டும் என்பதில் வேகம் காட்டவில்லை. படித்தவர்கள் அரசாங்க உத்யோகங்களைத்தான் எதிர் பார்த்துக்