பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19, etipg;mui 5öm/smud 144

இந்தக் கதையில் கதாநாயகன் மேலும் கூறுகிறார். பஞ்சம் பசி, பட்டினியால் அடித்தட்டு மக்களே அதிகமாக பாதிக்கப் படுகிறார்கள் என்பது ஒன்று.

அவர் மேலும் பசுமாடு பற்றிக் குறிப்பிட்டுப் பேசுகிறார். ஹறிந்து நாகரிகத்தில் பசுமாடு மிகப்பிரதானமான வஸ்துக்களிலே ஒன்று. ஹிந்துக்களின் நாகரிகம் விவசாயத் தொழிலைப் பொருத்து நின்றது. விவசாயத் தொழிலுக்குப் பசுவே ஜீவன். ஆதலால் ஹறிந்துக்கள் புராதன காலம் முதலாகவே கோமாம் சத்தை வர்ஜனம் செய்து விட்டார்கள் என்று குறிப்பிடுகிறார்.

அவர் மேலும் கூறுகிறார். பஞ்சம் நோய் முதலிய பொதுப் பகைவருக்கு முன்பு நமது உயர்வு தாழ்வுகளை விரித்துக் கொண்டு நிற்பது மடமை. தாழ்ந்த ஜாதியார் என்பவர்களை நாம் மித மிஞ்சித் தாழ்த்தி விட்டோம். அதன் பலன்களை நாம் இப்போது அனுபவிக்கிறோம்.

முற்பகல் செய்யிற் பிற்பகல் விளையும். நாம் பள்ளர் பறையருக்குச் செய்ததையெல்லாம் நமக்கு அன்னிய நாடுகளில் பிறர் செய்கிறார்கள். நமது சிருங்ககிரி சங்கராச்சாரியாரும் வான மாமலை ஜியர் சுவாமிகளும், நேட்டால், திரான்ஸ்வால் தேசங்களுக்குப் போவார்களானால் ஊருக்கு வெளியே சேரிகளிலே வாசம் செய்ய வேண்டும். சாதாரண மனிதர்கள் நடக்கும் ரஸ்தாக்களில் நடக்கக் கூடாது. பிரத்தியேகமாக விலகி நடக்க வேண்டும். பல்லக்குகள் வண்டிகள் இவற்றைப் பற்றி யோசனையே வேண்டியதில்லை என்று குறிப்பிடுகிறார்.

சாதீய முறைகள், சாதி வேறுபாடுகள், பாகுபாடுகள் தீண்டாமை முதலிய கொடுமைகளை எதிர்த்து பாரதி தனது கவிதைகள் கட்டுரைகள், கதைகள் எழுத்துக்கள் அனைத்திலும் மிகவும் கடுமையாகப் பேசியுள்ளார்.