பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20. சுதேசிய-முயற்சி 145

20. சுதேசிய முயற்சி:

சுதேசிய முயற்சி நாட்டிலே தோன்றிய பிறகு பல விஷயங்களில் குணம் கண்டிருக்கிறோம். கைத் தொழில் அபிவிருத்தி, தேசீய வர்த்தகம், ஜன ஐக்கியம், சுய பாஷைகளின் வளர்ச்சி முதலிய பல அம்சங்களிலே கைகண்ட பலன்களைப் பார்த்திருக்கிறோம். அதை நாம் இன்னும் எத்தனைக்கெத்தனை ஆவலுடன் பரிபாலித்து வருகிறோமோ அத்தனைக்கத்தனை நாடு பல விதங்களிலேயும் கூேடிமப்பட்டு வரும்.

குணமது கைவிடேல் என்னும் தலைப்பில் சுதேசியத்தையும் மற்ற சுதந்திரமான பல செயல்பாடுகளைப் பற்றியும் பாரதி சில வலுவான கருத்துக்களை முன் வைக்கிறார். நமது நாட்டின் அக்கால நிலைமையைப் புரிந்து கொள்வதற்கும், எதிர் காலத் திட்டங்களை வகுத்துக் கொள்வதற்கும் பாரதியின் இந்தக் கருத்துக்கள் நமக்கு வழி காட்டியாக அமைந்துள்ளன. பாரதி கூறுகிறார்.

“ஆனால் சென்ற சில வருடங்களாக ஆங்கிலேய அதிகாரிகளிலே சில சில்லரை உத்தி யோகஸ்தர்கள் தம்மவர்களாகிய ஆங்கிலேய வர்த்தகர்களுக்கு இதனால் நஷ்டமும் தமக்கேசில அசெளகரியங்களும் உண்டாவது கருதி இதைச் சில தப்பான வியாஜ்யங்களைச் சொல்லி அடக்கி விடப் பார்க்கிறார்கள். ஆட்டுக் குட்டியைத் தின்ன விரும்பிய ஒநாய் “ஏ, ஆட்டுக் குட்டியே நீ என்னைத் திட்டினாயாமே?” என்று கேட்ட கதை போல் இந்த ஆங்கிலேய உத்தியோகதஸ்தர்கள் நம்மை இராஜத் துரோகிகள் என்று பொய்க் குற்றம் சார்த்தித் தண்டனைகள் செய்து நமது காளியத்தைக் கெடுத்து விடப் பார்க்கிறார்கள். இங்ங்ணம் ஆங்கிலேய அதிகாரிகளிலே பலர் பொய்யான கோப நடிப்பு நடித்துக் கொண்டு நம்மவர்களிலே சில முதல்வர்களுக்கு மிருகத்தனமான தண்டனைகள் விதித்து விட்டதினின்றும், கிராமாந்திரங்களிலே சாமான்ய ஜனங்கள்,