பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

urgêuos e-sovsso-nose egouse eöpe * gezwué-Gégoss- **erroso 11

மக்களுக்குத் தனது கருத்துக்களை எழுதி வெளியிட்டார். அதற்கு அடுத்த படியாக பாரதியார், தமிழ் உரைநடையை, மக்களுக்கு பழக்கத்தில் இருந்த பேச்சு நடைக்கேற்ப சாதாரண மக்களும் எளிமையாகப் புரிந்து கொள்ளக் கூடிய முறையில் எழுதத் தொடங்கினார்.

பாரதியாரின் படைப்புகளில் அவருடைய கவிதைகளைப்

போலவே அவருடைய உரைநடைக் கட்டுரைகளிலும் பலவேறு தலைப்புகளிலும் உயர்ந்த பல கருத்துக்களை வெளியிட்டுள்ளார். ஆயினும் அவருடைய கவிதைகளின் அளவுக்கு அவருடைய உரைநடைக் கட்டுரைகள் அவைகளின் சிறந்த கருத்துக்கள் பிரபல மடைந்ததாகக் கூற முடியவில்லை. காரணம் நாம் பாரதியை மகாகவியாகவே, கவிஞராகவே அறிமுகப்படுத்தியதும், அவருடைய கட்டுரைகளைப் பிரபலப்படுத்தாமையேயாகும். எனவே, பாரதியின் கவிதைகளைப் போலவே அவருடைய உரைநடைக் கட்டுரைகளையும் அவை பற்றிய விளக்கவுரை நூல்களையும் வெளியிட்டு அவருடைய பன்முகத் தன்மைகளை மிகவும் விரிவான முறையில் பிரபலப்படுத்த வேண்டும். மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். பலவேறு மொழிகளிலும் பாரதியின் கட்டுரைகளையும், விளக்க நூல்களையும் மொழியாக்கம் செய்து நாடறியச் செய்ய வேண்டும் உலகரியச் செய்ய வேண்டும். அதற்கென தனி முயற்சிகளும் தேவைப்படுகின்றன. பாரதி மன்றங்கள், பாரதி ஆர்வலர்கள் இம்முயற்சிகளை மேற்கொள்ளலாம்.

இந்த நோக்கத்தில் “தமிழ் மொழி வளர்ச்சியில் பாரதியின் உரைநடை” என்னும் தலைப்பில் ஒரு நூல் எழுதி, வெளியிட்டுள்ளோம். அந்த நூலில் முக்கியமாக பாரதி எழுதியுள்ள பல கட்டுரைகளிலும் உள்ள உரைநடை மொழியினை மேற்கோள்கள் எடுத்துக் காட்டியுள்ளோம். அவைகளில் குறிப்பாக வசன நடைபற்றி