பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

LTU;£uïoçI உரைநடையில் அரசியல் மற்றும் #(PSTussgBģigilässir--> *soforssör 155

வருகிறார்கள். இந்திய நாட்டில் இஸ்லாமிய மதத் தலைவர்கள் கடந்த ஆயிரம் ஆண்டுகளாகவும், கிறிஸ்தவ மதத்தலைவர்கள் கடந்த முன்னுாறு ஆண்டுகளாகவும் மற்றவர்களை மத மாற்றங்கள் செய்வதில் ஈடுபட்டு வந்திருக்கிறார்கள். அதற்கு அக்காலங்களில் இருந்த அரசுகளும் அவர்களுக்கு சாதகமாக ஆதரவாக இருந்திருக்கின்றன.

இந்த மத மாற்றங்களில் கட்டாய மத மாற்றங்கள் தான் அதிகம். ஆட்சி அதிகாரங்களின் ஆதரவு, அதிகார அச்சுறுத்தல், ஆசை வார்த்தை காட்டல், பெருளுதவி செய்தல், மற்ற மதங்களைப் பற்றி அவதூறு செய்து ஏமாற்றுதல் இன்னும் இம்மாதிரியான முறையற்ற செயல்கள் மூலம் இந்தக் கட்டாய மத மாற்றங்கள் பல இடங்களிலும் நடை பெற்றுள்ளன. இத்தகைய கட்டாய மத மாற்றங்களினால் அதிகமாக பாதிக்கப் பட்டவர்கள் ஹிந்துக்கள் தான். எனவே அவர்களுக்கு இது விஷயத்தில் மனவருத்தம் ஏற்படுகிறது. அது இயல்பேயாகும்.

ஒவ்வொரு மதஸ்தருக்கும் அவரவர்களுடைய மதமும் மதபோதனைகளும் மத வழிபாடுகளும் முக்கியமானதும் மேலானதும் தான். அதை இந்த நாடு தொன்றுதொட்டு அங்கீகரித்து வந்திருக்கிறது. அவ்வப்போது மதத்தின் பேரால் சில கலவரங்கள் நடைபெற்றிருந்த போதிலும் பொதுவாக பாரதத்தின் பொது குணம் இவ்விஷயத்தில் இணக்கமானதாகும்.

ஐரோப்பாவில் கிறிஸ்தவர்களுக்குள்ளே பல உள்கல -வரங்களும், கலகங்களும், போர்களும், போப் அதிகாரத்திற்கு எதிரான ஆயுதக் கலகங்களும் சிலுவையுத்தங்களும் நடைபெற்றிருக்கின்றன, என்பது வரலாற்றுப் பதிவுகளாகும். இஸ்லா மியர்களுக்கிடையிலும் ஷியா-சன்னி என்று மோதல்களும் கலகங்களும் ஏற்பட்டிருக்கின்றன. பல படுகொலைகள் நடந்திருக்கின்றன என்று வரலாற்றுக்குறிப்புகள் கூறுகின்றன.