பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30. SuGüsnauti 194

செல்கிறது. இந்தியர்கள் வாழும் இதர நாடுகளுக்கும் நமது பொருள்கள் செல்வதற்கு அதிக கவனம் செலுத்த வேண்டும். இப்போது தமிழ் நாட்டின் வர்த்தகம் உபரியாகவே உள்ளது. மேலும் அதை அதிகரிக்கவும் செய்ய வேண்டும்.

பலவேறு தொழில்களுக்காக வெளிநாடுகள் சென்று அங்கு பணியாற்றும் தமிழர்கள், பலநாடுகளிலும் குடியேறியுள்ள அங்கு வரும் இந்தியர்களின் பகுதியாகவுள்ள தமிழ் பேசும் மக்கள் தமிழ் மொழியின் வளமையையும், தமிழ் இலக்கியங்களையும் தமிழ் பண்பாட்டுச் சிறப்புகளையும், நமது இசை நிகழ்ச்சிகளையும், அறிமுகப் படுத்த வேண்டும். நமது தமிழ் நூல்களையும், பத்திரிகைகளையும் அறிமுகப் படுத்த வேண்டும். தமிழ் நாட்டின் பத்திரிகைகள் அந்த நாடுகளின் சிறப்பு மலர்களாகவும் வெளியிட வேண்டும். தமிழ் இலக்கிய மன்றங்கள் அமைத்து தமிழ் இலக்கியங்களையும், இசையையும், உணவு முறைகளையும், கட்டிடக் கலைகளையும் அந்த நாடுகளில் அறிமுகப் படுத்தி வளர்க்க வேண்டும்.

ஏற்கனவே, மலேஷியா, சிங்கப்பூர், இலங்கை, மொரிஷஸ், தென் ஆப்பிரிக்கா, பீஜி, மேற்கு இந்திய தீவுகள், கயானா, ரீயூனியன், கரிநாம் மற்றும் பல ஆப்பிரிக்க தென் அமெரிக்க நாடுகளுடன் தென் கிழக்கு ஆசிய நாடுகளுடன் நமது தொடர்புகள் அதிகரித்து வருகின்றன. இந்த நாடுகளிலுள்ள மக்களுடன் இந்திய அரசின் உதவியுடன் உள்ள நல்லுறவுகளை மேலும் அதிகரிக்க வேண்டும்.

XX XX XX