பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

TTL LSL ML Ly TLLLLy LLLLL LLLL LLLTT LLLSK SLLLLLS S00

இங்ங்ணம் நெடுநேரம் ஜீவ நாசத்தின் அநியாயத்தையும் அதனால் மனிதனுக்கு உண்டாகும் எண்ணற்ற பாவங்களையும் அவற்றால் உண்டாகும் நோய் சாவுகளையும் குறித்துப் பேசிக் கொண்டிருந்தோம். அந்த சம்பாஷணை முழுவதையும் இங்கு எழுத இடமில்லை. எனினும் நான் கோபால் பிள்ளையிடம் வாக்குக் கொடுத்தப்படியே இங்கு வேண்டுதல் செய்கிறேன். தமிழ் நாட்டு ஜனத் தலைவர்களே ! உங்கள் காலில் விழுந்து கோடி நமஸ்காரம் செய்கிறேன். மாமிச பகஷனத்தை நிறுத்துவதற்கு வழி செய்யுங்கள்” என்று பாரதி எழுதிக் கட்டுரையை மிகவும் அடக்கமாக முடிக்கிறார்.

பாரதியார் இந்தக் கட்டுரையில் நாட்டின் மிக முக்கியமான பிரச்னைகளை வெளிப்படுத்திக் காட்டியுள்ளார். இன்றும் அவை நமது சிந்தனைக்கும் செயலுக்கும் தேவைப் படுகிறது. இந்தக் கட்டுரையின் மையமான கருத்து ஆடு கோழிகளை பலியிட வேண்டாம். ஆடுமாடுகளை, கால்நடைகளைப் பாதுகாக்க வேண்டும் பராமரிக்க வேண்டும் என்பதாகும். பாரத நாட்டின் சாத்திரங்கள் எல்லாம் மனிதனோடு இயற்கையை இணைத்து வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும் என்றே வற்புறுத்துகிறது. அதற்கு மனிதன் வழி காட்டியாக இருக்க வேண்டும் என்பதாகும். இராமாயணத்தில் இராமனுடன் மனிதர்களும் விலங்குகளும் பறவைகளும் இதர உயிரினங்களும் இணைந்து நிற்கின்றன. இதையே வேறுள குழுவையெல்லாம் மானுடம் வென்றதம்மா’ என்று கம்பர் குறிப்பிடுகிறார். மனிதாபிமானமே உலகனைத்தையும் அரவணைத்துச் செல்கிறது என்பது அதன் பொருளாகும்.

ஆயிரம் ஆண்டு கால ஆக்கிரமிப்புகளும், போர்களும் அன்னிய ஆட்சியும் அதன் கொள்ளையும், கொலையும், கொடுங்கோன்மையும் நாட்டை நாசப்படுத்தியிருக்கிறது. அந்த நாசத்திலிருந்து பாரத நாட்டை மீட்க வேண்டும்.