பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

LLLLLLLL L L0LS LLS LLLLy CMCT LLLLLLTLLLLSK LLLLLS 17

திரும்புவார்கள். இந்த அற்புதமான காட்சி கண் கொள்ளாக் காட்சியாக இருக்கும். அழகருக்கு முன் அனைவரும் சமம். இவ்வாறு பல லட்சக்கணக்கான மக்கள் பக்திப் பெருக்குடன் ஒன்று திரண்டு குவியும் காட்சியை உலகில் வேறு எங்கும் காண முடியாது.

மதுரையைப் போலவே தமிழ் நாட்டில் பல கோயில் திருவிழாக்களிலும் தேர் திருவிழாக்களிலும் பல்லாயிரக் கணக்கான லட்சக்கணக்கான மக்கள் கூடுவதைக் காண்கிறோம். கும்பகோணம் மகாமகம், திருவண்ணாமலை கார்த்திகை தீபம், பழனி இன்னும் பல இடங்களிலும் சிறப்புமிக்க திருவிழாக்களில் சாதி பேதமின்றி அனைத்து மக்களும் கூடுகிறார்கள். இந்திய நாட்டிலும் கும்பமேளா, பூரி ஜகன்னாதர் தேரோட்டம் திருமலை பிரம்மோத்சவம் மற்றும் பல இடங்களிலும் லட்சோபலட்சம் மக்கள் கூடுகிறார்கள். பாரத புண்ணிய பூமியில் இவ்வாறு சாதி சமய வேறுபாடின்றி வேத தெய்வங்களை வழிபடும் மக்கள் இவ்வாறு திருவிழாக்களிலும் இதர விழாக்களிலும் ஒன்று கூடுவதைக் காண்கிறோம். இது பாரத நாட்டின் தனிப் பெரும் பண்பாடும் பாரம்பரியமும் ஆகும்.

தெய்வ பக்தியில் கோடிக் கணக்கில் மக்களை ஒன்று சேர்த்து ஒற்றுமைப் படுத்தும் பணியில் பல அருட் செல்வர்களும் பக்தி இயக்கத்தின் சான்றோர்களும், மகான்களும், ஆழ்வார்களும் நாயன்மார்கள், ஆச்சார்யர்களும், சாதுக்களும் வழிகாட்டிகளாக இருந்தார்கள். அய்யப்ப பக்தர்கள், மேல்மருவத்துர் பக்தர்கள் ஆகியோர்களும் லட்சக் கணக்கில் ஒன்று கூடுவதையும்

காண்கிறோம்.

தெய்வ பக்தியில் ஒன்று சேரும் இந்தக் கோடிக் கணக்கான மக்களை தேச பக்தியின் மூலமும் ஒன்று படுத்தி தேச முன்னேற்றப் பணிகளிலும் ஈடுபடுத்தலாம். ஆனால் அதற்கு வழி காட்ட வேண்டிய