பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமு

பாரதி தனது கட்டுரைகளில் தொடாத பிரச்னையில்லை. அரசியல், பொருளாதாரம், பல சமுதாயப் பிரச்னைகள், ஜாதிக் கொடுமைகள், சாதி அமைப்பு பற்றிய பல பிரச்னைகள், இசை, சங்கீதம், பக்தி மார்க்கம், தத்துவ சிந்தனைகள், பெண்ணுரிமை, கலை, தொழிலாளர், முதலிய பலவேறு பிரச்னைகளைப் பற்றியும் துல்லியமாகவும், தெளிவாகவும் வெளிப்படையாகவும் பல கருத்துக்களையும் எடுத்துக் கூறியுள்ளார்.

அத்துடன் பாரதியாரின் மிகப் பெரிய சாதனைகளில் ஒன்று, தமிழுக்கு அவருடைய தலை சிறந்த பங்களிப்பு, அவருடைய பகவத் கீதை மொழி பெயர்ப்பும் அதற்கு அவர் எழுதியுள்ள முன்னுரையுமாகும்.

இந்த நூலில் பாரதியார் எழுதியுள்ள கட்டுரைகளில் உள்ள சில முக்கியமான அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்களை மட்டும் எடுத்து அவற்றின் இன்றைய பொருத்தமும் அதற்கான விளக்கமும் விரிவுரையும் எடுத்துக் கூறப் பட்டிருக்கிறது. ஏற்கனவே “தமிழ் மொழி வளர்ச்சியில் பாரதி உரைநடையின் பங்கு” என்னும் தலைப்பில் ஒரு நூல் வெளியிட்டிருக்கிறோம். அதைத் தொடர்ந்து இந்த நூலும் வெளியிடப் படுகிறது.

பாரதி தன்னுடைய கவிதைகளிலும் கட்டுரைகளிலும் எந்தத் துறையைப் பற்றியும் எந்தப் பிரச்னையைப் பற்றி எழுதியிருந்தாலும் அதில் தேச பக்தியும் தெய்வ பக்தியும் ஆழப்பதிந்து இணைந்து இருப்பதைக் காணலாம்.

அவருடைய தேசபக்தப் படைப்புகளில் தெய்வ பக்தியையும் தெய்வ பக்தப் படைப்புகளில் தேசபக்தி உணர்வுகளையும் காணலாம். பாரதியாருடைய தெய்வ பக்தியும், தேச பக்தியும் ஆத்மார்த் -திகமானது, உணர்வு பூர்வமானது. உள்ள பூர்வமானது, உண்மை உணர்வை வெளிப்படுத்துவது, உயிர்த்துடிப்பு மிக்கது.