பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோற்றுவாய் 24 காட்சி கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. தெய்வ பக்தி நிரம்பிய கிராம மக்களின் ஊர் ஒற்றுமை அனைவருக்கும் முன்னுதாரணமாக அமைந்திருந்தது.

சாதிமத வேறுபாடின்றி அனைவரும் விழாவில் பங்கு கொண்ட இந்த ஒற்றுமை, தெய்வ பக்தியின் அடிப்படையில் அமைந்த இந்த ஒற்றுமை, அந்த ஊர்களின் சேர்மானத்தின் முக்கியமான பொதுப் பிரச்னைகளிலும், குடிதண்ணிர், கால்நடைகளுக்குத் தேவையான தண்ணிர், கிராம சுத்தம், ஊரணிகள் பராமரிப்பு, மந்தை சந்தை, பள்ளிக்கூடங்களின் பராமரிப்பு, அபிவிருத்தி, இந்த ஊர்களைச் சேர்ந்த ஒன்பது பாசனக் கண்மாய்களின் மராமத்து பராமரிப்பு அந்த கிராமங்களின் உற்பத்திப் பொருள்களான நெல், சோளம், கம்பு, கேழ்வரகு, பருத்தி, வேர்க்கடலை, கரும்பு, தேங்காய், கொய்யா, மாம்பழம் ஆகியவற்றை ஆதாரமாகக் கொண்ட மறு உற்பத்தித் தொழில்கள், சந்தை, கூட்டுறவு நிர்வாகம், பஞ்சாயத்து நிர்வாகம் சிறு வழக்குகள் தீர்வு முதலிய அடிப்படையான கிராம மக்களின் பொருளாதார சமுதாயப் பிரச்னைகளுக்கு தீர்வு கண்டு ஊர் ஒற்றுமை, ஊர் மேம்பாடுகளை வளர்க்கவும், இந்த ஊர்கள் குடியிருப்புகளில் உள்ள அத்தனை கோயில்களையும் வழிபாட்டு ஸ்தலங்களையும் புதுப்பிக்கவும், பராமரிக்கவும், பூசைகள் நடத்தவும், பரஸ்பரம் உதவி செய்தும், தெய்வபக்தி தேசபக்தியை (ஊர் பக்தி) இணைத்து திருவிழாக்கள் நடத்தவும், கல்வியையும் செல்வத்தையும் பெருக்கவும் பரஸ்பர சகாயத்துடன் மனித சக்தியைப் பயன்படுத்தவும் முன் வரும் போது சுபீட்சமும் மகிழ்ச்சியும் பொங்கும் என்பதில் சந்தேகமில்லை.

இவையெல்லாம் சமுதாயத்தில் ஏற்பட்டு வரும் புதிய வளர்ச்சியாகும். இவை விரிவடைய வேண்டும். அனைத்து மக்களிடமும்பரவவேண்டும். மேலும் சமுதாயத் தீமைகளை, குடி,