பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

CLLLL C L0LS LLS LLLLL LLLL LLLLLLTTTySAAAAAS LLLLLL S0

என்றும், “உள்ளத்திலே நேர்மையும் தைர்யமும் இருந்தால் கை பிறகுதானாகவே நேரான எழுத்து எழுதும். தைர்யம் இல்லாவிட்டால் வசனம் தள்ளாடும்” என்றும், ‘வசன நடை, கம்பர் கவிதைக்குச் சொல்லியதைப் போலவே தெளிவு, தண்மை, ஒளி, ஒழுக்கம் இவை நான்கும் உடையதாக இருக்க வேண்டும். இவற்றுள் ஒழுக்கமாவது தட்டுத் தடையில்லாமல் நேரே பாய்ந்து செல்லும் தன்மை. நமது தற்கால வசன நடையில் சரியான ஒட்டமில்லை. தள்ளாட்டம் அதிகமாகக் காணப்படுகிறது. உள்ளத்திலே தமிழ்ச் சக்தியை நிலைநிறுத்திக் கொண்டால் கை நேரான தமிழ் நடை எழுதும்” என்றும் குறிப்பிடுகிறார். பாரதியின் படைப்புகள், அவருடைய எழுத்துக்கள், கவிதைகள், கட்டுரைகள், கதைகள் எல்லாம் பெரும்பாலும் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வெளியானவை. se

1857-ம் ஆண்டில் நடைபெற்ற முதலாவது இந்திய சுதந்திரப் போராட்டம் பல காரணங்களால் தோல்வியைத் தழுவியது. ஆயினும் அந்த மாபெரும் போராட்டம் ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சியை அசைத்து ஆட்டம் காண வைத்தது. அதனால் பிரிட்டிஷ் பாராளுமன்றமே, இந்தியப் பிரச்னையில் தலையிட்டு, இந்தியாவில் பிரிட்டிஷ் ஆதிக்கத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்காகத் தன்னுடைய நேரடி ஆட்சியை 1858-ம் ஆண்டில் இந்திய நாட்டில் நிறுவிக் கொண்டது. பிரிட்டிஷ் ராணி இந்திய நாட்டின் சக்கரவர்த்தினியாக அறிவிக்கப்பட்டாள்.

ஆங்கிலேயேர்கள் ஒரு நூறு ஆண்டுகளுக்கு மேல் இந்தியப் பெருநாட்டில் நடத்திய கொள்ளை, போர்கள், படுகொலைகள் மற்றும், இந்த நாட்டுத் தொழில், குறிப்பாக நெசவுத் தொழில், வர்த்தகம், விவசாயம், நீர்ப்பாசன முறைகள், கால்நடைவளம், மனித வளம்