பக்கம்:பாரதியின் தேசீயம்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோற்றுவாய் لك நமது முன்னோர்கள் ரிஷிகள், முனிவர்கள், சித்தர்கள், இசை மேதைகள், அறிவியல் வல்லுநர்கள், சிற்பிகள், இயல் இசை நாடகப் படைப்பாளிகள், நமது தலை சிறந்த நூலோர்கள், நமது அருங்கோயில்கள், கோபுரங்கள், குளங்கள், ஏரிகள் இதர நீர் நிலைகள், கல்வி நிலையங்கள், குருகுலங்கள், பல்கலைக் கழகங்கள், நமது தொழில்கள், சாகுபடி, கால்நடைப்பண்ணைகள், நமது சாலைகள், அரசியல், பொருளாதார தத்துவ ஞான மேதைகள், ஞானிகள் முதலியனவெல்லாம், நமது பாரம்பரியமான செல்வங்களாகும். இவையெல்லாம் பாரதத்தின் பெருமைகளும் வரலாற்றுச் சிறப்புகளுமாகும். நமது வீரர்கள் புகழ் மிக்கவர்களும் தர்மத்தின் வழியில் நின்றவர்களுமாகும். இவையெல்லாம் நமது தேசீயத்தின் மரபுகளாகும். பாரதியின் தேசீயம் என்பது, மேலைநாடுகளின் கருத்துக்களில் கூறப்படுவதைப் போல வெறும் பூகோள எல்லைக் கோடுகளையும், அரசியல் நிர்வாகப் பிரிவுகளையும், பொருளாதாரச் சந்தைகளையும் மட்டும் கொண்ட தேசீயம் போன்றதல்ல. பாரத தேசம் என்பது மிகப் பழைமையான, நீண்ட பாரம்பரியத்தையும், நாகரிகத்தையும், பண்பாட்டையும், வரலாற்றுச் சிறப்புகளையும், சிந்தனைவழி முறைகளையும் அறிவுத்துறையின் தொடர்ச்சியான செயல்பாட்டு முறைகளையும், வளர்ச்சியையும் கொண்டதாகும். பழமை மிகுந்திருந்தாலும் இளமையோடு நீடிக்கும் ஒரு ஆன்மீக பூமியாகும். எத்தனையோ ஆட்சிகளும் அரசியல் நிர்வாகங்களும் தோன்றி மறைந்தாலும் பாரத மக்கள் பாரதத்தின் ஒன்றுமை உணர்வையும், இமயம் முதல் குமரி வரையிலுமான தொடர்பு இணைப்புகளையும் தொடர்ச்சியான இணைப்பான செயல் பாடுகளையும் கொண்டவர்களாகவே இருந்திருக்கிறார்கள். பாரதத்தின் ஒரு பண்பாடு வேற்றுமையில் ஒற்றுமை காண்பது என்பதாகும். அது ஒரு நெறிமுறையாக வளர்ச்சியடைந்து வந்திருக்கிறது. அதே சமயத்தில் அதன் பொருள் அன்னியத் தன்மைக்கு விட்டுக் கொடுத்து விடுவது என்பதல்ல. நமது வேற்றுமையில் ஒற்றுமை என்பது உயிர் இணைப்பு கொண்டது.