பக்கம்:பாரதியின் தேசீயம்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதியின் தேசியம் -அ. சீனிவாசன் LE மருத்துவ மலையின் மருத்துச் செடிகளின் சிறப்புகளைப் பற்றிக் குறிப்பிடும் போது ஜாம்பவன், "மாண்டாரை உய்விக்கும் மருந்தொன்றும் மெய்வேறு வகிர்களாகக் நீண்டாலும் பொருந்துவிக்கும் ஒரு மருந்தும் படைக் கலன்கள் கிளர்ப்பது ஒன்றும் மீண்டேயும் தம் உருவே அருளுவதோர் மெய் மருந்தும் உள, நீ விர! ஆண்டு எகிக் கொணர்தி, என அடையாளத் தோடும் உரைத்தான் அறிவின் மிக்கான் என்று அனுமனிடம், அத்தகைய சிறப்பு மிக்க மருத்துவ மலையில் உள்ள மருந்துச் செடிகளைக் கொணரும் படி கூறினான் வாயு புத்திரன், வல்லமையும் பேராற்றலும் மிக்க அந்த ஆஞ்சநேயன் வாயு வேகத்தில் வேகமாக மேரு மலையை நோக்கிச் சென்றான். அதற்கப்பால் உள்ள சஞ்சீவி மலையைக் கண்டான். இங்கு நின்று கொண்டு இன்ன மருந்து என்று கண்டு கொள்ள நேரமில்லை என்று கருதி, மாருதி சஞ்சீவி மலையை வேரோடு எடுத்துக் கொண்டு வேகமாகத் திரும்பினான். சஞ்சீவி மலையை அனுமன் கொண்டு வந்து விட்டான். மருத்துவ மலையின் மூலிகைக் காற்றுப் பட்ட உடனே, மாண்டு கிடந்த இலக்குவனும் வானரப்படைகளும் உயிர் பெற்று எழுந்தனர். அவர்களுடைய உடல்களில் பாய்ந்திருந்த ஆயுதங்கள் நீங்கின. அங்கங்கள் இணைந்தன. காயங்கள் மறைந்தன. தழும்புகள் நீங்கி அனைவருக்கும் பழைய நிலைக்கு உடம்புகள் கூடின. அனைவரும் மீண்டும் புத்துயிர் பெற்று எழுந்தனர். அது போல, அன்னிய ஆட்சியால், ஆக்கிரமிப்பால், படையெடுப்புகளால், போர்களால், கொள்ளைகளால், படுகொலைகளால், கொடுங்கோன்மையால், வன்முறை ஆட்சியால், பாதிக்கப் பட்டு, சேதமடைந்து, படுகாயமடைந்து சிதைந்து போயிருந்த பாரத