பக்கம்:பாரதியின் தேசீயம்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதநாட்டில் தேசிய இயக்கங்கள் 18 | காங்கிரஸ் கட்சி கூறும் தேசீயம் இந்து தேசீயம் என்றும், இந்தியாவில் வாழும் முஸ்லிம் மக்களுக்கு அந்த தேசீயம் ஒத்துப் போகாது என்றும், முஸ்லிம்கள் தனிதேசம் என்றும் அவர்களது தேசியம் தனி தேசியம் என்றும் அது முஸ்லிம் தேசியம் என்றும் கூறியும், வாதிட்டும், அதனடிப்படையில் பாகிஸ்தான் பிரிவினை கோரிக்கையை முன் வைத்தும், போராட்டங்கள், கலவரங்கள், படுகொலைகளை, பாலியல் வன்முறைகள், கட்டாய மத மாற்றங்கள் நடத்தியும் இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் பிரிந்து அது தனி நாடாயிற்று. இந்து என்பதும் இந்துத்வம் என்பதும் இன்று பலரால் தவறாகப் புரிந்து கொள்ளப் படுகிறது. அதற்கு அன்றைய தேசப் பிரிவினை இயக்கமும் ஒரு காரணமாகும். இந்து என்றாலும், இந்துத்வம் என்றாலும் அது மதத்தைக் குறிக்கும் சொல் அல்ல. இந்து அல்லது இந்துத்வம் என்றால் அது இந்து தர்மமாகும். அது அறம், பொருள், இன்பம், வீடு என்னும் பயனீடுகளை அதாவது தர்மம், அர்த்தம், காமம், மோட்சம் என்னும் புருஷார்த்தங்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு வாழ்க்கை நெறி முறையாகும். இது பாரதத்தில் வாழும் அனைவருக்கும் பொருந்துவதாகும். இந்தக் கருத்து விளக்கங்கள் இன்னும் தெளிவு பட வேண்டும். அதனால் தான் இந்து என்றாலே, இந்துத்வம் என்றாலே அது மதவாதம் என்றும், வகுப்புவாதம் என்றும் தவறாகப் புரிந்து கொள்ளப் படுகிறது. பாகிஸ்தான் பிரிவினை வாதத்தையும் மத அடிப்படையில் முஸ்லிம் தேசீயம் என்றும் கருத்துக்களைப் பரப்பியதும் இந்திய மக்களிடையில் இன்னும் பல தவறான குழப்பமான கருத்துக்கள் நிலவக்காரணமாக இருந்து வருகின்றன. இந்து சமுதாயம் என்பது இந்துத்வம் என்பது பாரத நாட்டின் அனைத்து மக்களையும் உள்ளிட்ட ஒன்று பட்ட சமுதாயம் என்பதும் தெளிவாக உணரப்பட வேண்டும்.