பக்கம்:பாரதியின் தேசீயம்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரதியின்-தேசிம்-ஆ-சீனிவாசன் 19 | பாகிஸ்தான் தனி நாடாகப் பிரிந்து இருபத்தைந்து ஆண்டுகளில் பாகிஸ்தான் தேசியம் (இஸ்லாமிய தேசீயம்) உடைந்து மொழி வழி தேசியம் என்னும் பெயரில் பங்களாதேஷ் (கிழக்கு பாகிஸ்தான்) பிரிந்து அது ஒரு தனி நாடாகி விட்டதையும் கண்டோம். பாரத தேசம் சேதப்பட்டு, அதிலிருந்து பாகிஸ்தான், பங்களா தேஷ் என்று தனியான இஸ்லாமிய நாடுகளாகப் பிரிந்திருந்தாலும் இஸ்லாமிய தேசீயம் என்பது நிற்க வில்லை. அது உடைந்து சிதரி விட்டது. ஆயினும் அன்று முஸ்லிம்கள் தனி தேசம், தனி தேசீயம் என்று பரப்பப்பட்ட பிரிவினை வித்துக்கள் அடிப்படை மதவாதக் கருத்துக்கள் பாரத தேசீயத்தைப் பாதித்துப் பல குழப்பங்களை ஏற்படுத்தி வருகிறது. அதனால் அத்தகைய முஸ்லிம்கள் முழுமையாக இந்திய தேசியத்துடன் இணைந்து கலந்து விட்டார்கள் என்று இன்று வரை உறுதியாகக் கூற முடியவில்லை. திராவிட தேசீயம் 1940-ம் ஆண்டுகளில் தென் இந்தியாவில் திராவிடர் இயக்கம் என்னும் பெயரில் தேசீய காங்கிரஸ் எதிர்ப்பு, இந்திய தேசீய எதிர்ப்பு, ஆரிய எதிர்ப்பு, வடமொழி எதிர்ப்பு, இந்தி எதிர்ப்பு வடக்கு எதிர்ப்பு, வேத எதிர்ப்பு-வடவர் நம்மவரும் அல்ல, நல்லவரும் அல்ல என்றெல்லாம் வெறும் எதிர் மறைக் கருத்துக்களைப் பேசி, திராவிட தேசீயம் என்னும் கருத்தையும் கருத்து வடிவத்தையும் அவர்கள் முன் வைத்தார்கள். இந்திய நாட்டை இந்தியத்துணைக் கண்டம் என்று கூறினார்கள். இன்றும் கூட அவ்வாறு கூறி வருகிறார்கள். திராவிட நாடு பற்றிய விளக்கங்கள் கூறப்பட்ட போது தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் பேசும் பகுதிகளை இணைத்து மொழிவழி பிரிந்து இனவழி சேர்தலே திராவிட தேசீயம் என்னும் கருத்துக்கள் வெளிப்பட்டன. திராவிட தேசீயத்திற்கு